வெள்ளரிப்பழம் வெள்ளரிக்காய் எவைகள் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவை. இந்த வெள்ளரிக்காய்கள் விதை உள்ள காய்களாகையால் இதன் பழங்களிலும் அதிக விதைகள் இருக்கும். இந்த வெள்ளரி பழம் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக்கூடியதும் நாவறட்சி ,நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த வெள்ளரி பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் நீர் சத்து உடலுக்கு நல்ல குளுமையை கொடுக்கின்றது. ஆகையால் தான் நாம் வெள்ளரிக்காய்களை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம். வெயில் காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் வெள்ளரி பழங்கள் எல்லாம் உடலுக்கு மிகவும் சக்தியை கொடுக்கக் கூடியவை.
உடலில் உள்ள நீர் சத்து குறையும் பொழுதெல்லாம் நமக்கு நீர்சத்தை மீட்டுக் கொடுப்பதற்கு உதவுகிறது. அதேபோல் வெள்ளேரி பழமும் வெயில் காலங்களில் அதிக அளவு கிடைக்கும். இந்த பழத்தில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். இப்படிப்பட்ட வெள்ளரிப்பழத்தை வைத்து வெள்ளரி பழ ஜூஸ் தயாரித்து குடிக்க இருக்கிறோம் . உடல் சூட்டையும் தணிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. சாலையோர கடைகளில் வெள்ளரி பழஜூஸை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது ருசித்திருக்களாம்.
வீட்டில் எப்படி சுவையாக இந்த வெள்ளரிப்பழ ஜூசை தயாரிப்பது என்பதை பார்க்க இருக்கிறோம். வெள்ளரியில் இருக்கும் அதிகப்படியான சத்துக்கள் உடலுக்கு நல் குளிர்ச்சியையும் நீர் சத்து தேவையும் பூர்த்தி செய்கின்றது. காயாக இருக்கும் பொழுது இருந்ததைவிட பழுத்துப் பிறகு வெள்ளரிக்காயின் சதை பகுதி நன்றாக மாவு போல இருக்கும். வெள்ளரி பழத்தின் மாவு போன்ற சதையை பயன்படுத்தி வெள்ளரி பழ ஜூஸ் தயாரிக்க இருக்கின்றோம். இதை ஜூஸாக மட்டுமல்லாமல் அப்படியேவும் சதைப்பகுதியை சர்க்கரையோடு கலந்து உண்ணும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும். வாருங்கள் உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
வெள்ளரிப்பழ ஜூஸ் | Cucumber Fruit Juice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 வெள்ளரிபழம்
- 3 ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது சீனி
- 1/2 கப் பால்
- 1 கப் ஐஸ் கட்டிகள்
செய்முறை
- முதலில் வெள்ளரி பழத்தை எடுத்து மேலே கழுவி விட்டு வெள்ளரி பழத்தின் நுனிபாகத்தையும் அடிபாகத்தையும் சிறிதளவு கட் செய்து கொள்ள வேண்டும். வெள்ளரிபழத்தை இரண்டாக கட் செய்து கொள்ள வேண்டும். இரண்டாக நறுக்கிய பழத்தின் உள்ளே உள்ள விதைகளை எடுத்து விட வேண்டும்.
- பின்பு பழத்தின் உள்ளே உள்ள விதைகளை தனியாக பிரித்து எடுத்து வைத்து விட வேண்டும். மீதமுள்ள வெள்ளரிப்பழத்தின் மேல் தோலை மட்டும் லேசாக சீவி எடுத்துவிட வேண்டும்.இப்பொழுது கிடைத்துள்ள வெள்ளரி பழத்தின் மாவு போன்ற சதைப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நறுக்கி வைத்துள்ள வெள்ளரிப்பழ துண்டுகளை போட்டு அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது சீனி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள வெள்ளரிப்பழ ஜூஸை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- பிறகு ஜூஸ் டம்ளரில் பாலோடுகலந்து வைத்துள்ள வெள்ளரிப்பழம் ஜூஸை சேர்க்கவும்.
- அதன் மேல் சிறு வெள்ளரிப்பழ துண்டுகளை பொடியாக நறுக்கி தூவி இரண்டு மூன்று ஐஸ் கட்டிகள் போட்டு குடிக்க கொடுத்தால் ருசியான உடலுக்கு நீர்சத்தை தரக்கூடிய உடல் சூட்டை தணிக்க கூடிய வெள்ளரிப்பழ ஜூஸ் தயார்.