வீடே மணக்க மணக்க ருசியான வெள்ளரிக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்! ஒரு சொட்டு சாம்பார் கூட மிஞ்சாது!

சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியா

By Prem Kumar · 19/12/2023

சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார்.

சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சாம்பார் டேஸ்டியாக இல்லாவிட்டால் வீட்டு உணவோ, விருந்து உணவோ ருசிக்காது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். சமைக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்ப சுலபமாக இந்த வெள்ளரிக்காய் சாம்பார் இப்படி செஞ்சு பார்த்தால் வீட்டிலிருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள். கல்யாண வீட்டு சாம்பார் போல சுவை தரும் இந்த வெள்ளரிக்காய் சாம்பார் செய்யவும் ரொம்ப நேரம் எடுக்காது. இந்த சாம்பாரையும் வைக்கிற விதமாக வைக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த தொகுப்பில் வெள்ளரிக்காய் வைத்து சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான மொச்சை பயறு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்! இனி உங்கள் வீட்டில் அடிக்கடி இதனை செய்வீர்கள்!

Recipes AMP · Quick view
View full