ருசியான மொச்சை பயறு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்! இனி உங்கள் வீட்டில் அடிக்கடி இதனை செய்வீர்கள்!

- Advertisement -

குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால் மட்டுமே அவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அப்படி பச்சை மொச்சை வகைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆனால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது.

-விளம்பரம்-

தினமும் ஒரு பிடி பயிறு வகை குழந்தைகளின் உணவாக இருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி நல்லவிதமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகள் பச்சை மொச்சை பயிரை வேக வைத்து சாப்பிட விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சம் பச்சை மொச்சை சாம்பார் சுவையாக செய்து கொடுக்கலாம். அப்படி மொச்சைப் பயறை வைத்து ஒரு சுவையான பச்சை மொச்சை சாம்பார் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பச்சை மொச்சை சாம்பார்  இப்படி செஞ்சிங்கன்னா, மொச்சை பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட, இன்னும் கொஞ்சம் கிடைக்குமான்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.நம்மில் பல பேருக்கு இந்த மொச்சை போன்ற பயிர் வகைகளை அறவே தவிர்த்து விடுவார்கள். இது வரை மொச்சை போட்ட கார குழம்பு வகைகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சமையல் குறிப்பு பகுதியில் நல்ல ஒரு அருமையான பச்சை மொச்சை சாம்பார் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்

Print
3 from 1 vote

பச்சை மொச்சை சாம்பார் | Mochai Sambar Recipe In Tamil

பச்சை மொச்சை சாம்பார்  இப்படி செஞ்சிங்கன்னா, மொச்சை பிடிக்காதுன்னு சொல்றவங்ககூட, இன்னும் கொஞ்சம் கிடைக்குமான்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாகஇருந்தாலும் அனைவருக்கும் புரதச்சத்து என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.நம்மில் பல பேருக்குஇந்த மொச்சை போன்ற பயிர் வகைகளை அறவே தவிர்த்து விடுவார்கள். இது வரை மொச்சை போட்டகார குழம்பு வகைகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த சமையல் குறிப்பு பகுதியில்நல்ல ஒரு அருமையான பச்சை மொச்சை சாம்பார் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப்போகிறோம்
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Mochai Sambar
Yield: 4
Calories: 18kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை மொச்சை
  • 2 வெங்காயம்
  • 1 கத்திரிக்காய்
  • 1 கப் துவரம் பருப்பு
  • 5 பல் பூண்டு
  • 1 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் புளி சாறு
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 சிறுதுண்டு வெல்லம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 கப் தண்ணீர்

செய்முறை

  • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை கழுவி போட்டு, போதுமான தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து குளிர வைக்க வேண்டும். இதேப்போன்று துவரம் பருப்பையும் குக்கரில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, கடைந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து. தீயை குறைவில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி, கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
  • பின்பு உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • சாம்பாரானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள மொச்சையை போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.இப்போது சுவையான மொச்சை சாம்பார் ரெடி.

Nutrition

Serving: 500g | Calories: 18kcal | Carbohydrates: 4g | Protein: 10.9g | Fiber: 1.5g | Calcium: 65mg | Iron: 0.1mg