வீடே மணக்க மணக்க ருசியான வெள்ளரிக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்! ஒரு சொட்டு சாம்பார் கூட மிஞ்சாது!

- Advertisement -

சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும். இது காய்கறிகள், பருப்புடன் கொத்தமல்லி தூள், மிளகாய்ப் பொடி போன்றவற்றால் செய்யப்பட்ட ஒரு குழம்பு வகை துணை உணவுப் பொருள். தென்னிந்தியாவில் சமைக்கப்படும் சாம்பாரின் ருசி தனி தான். தென்னிந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இது ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றது. நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. என்னதான் விதவிதமான உணவு வகைகளை சமைத்தாலும், நாம் தவிர்க்க முடியாத ஒரு பாரம்பரிய உணவு சாம்பார்.

-விளம்பரம்-

சாதம், இட்லி, தோசை என எதற்குமே சாம்பார் முக்கியம். சாம்பார் டேஸ்டியாக இல்லாவிட்டால் வீட்டு உணவோ, விருந்து உணவோ ருசிக்காது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். சமைக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்ப சுலபமாக இந்த வெள்ளரிக்காய் சாம்பார் இப்படி செஞ்சு பார்த்தால் வீட்டிலிருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள். கல்யாண வீட்டு சாம்பார் போல சுவை தரும் இந்த வெள்ளரிக்காய் சாம்பார் செய்யவும் ரொம்ப நேரம் எடுக்காது. இந்த சாம்பாரையும் வைக்கிற விதமாக வைக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த தொகுப்பில் வெள்ளரிக்காய் வைத்து சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
3 from 2 votes

வெள்ளரிக்காய் சாம்பார் | Cucumber Sambar Recipe In Tamil

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். சமைக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்ப சுலபமாக இந்த வெள்ளரிக்காய் சாம்பார் இப்படி செஞ்சு பார்த்தால் வீட்டிலிருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள். கல்யாண வீட்டு சாம்பார் போல சுவை தரும் இந்த வெள்ளரிக்காய் சாம்பார் செய்யவும் ரொம்ப நேரம் எடுக்காது. இந்த சாம்பாரையும் வைக்கிற விதமாக வைக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த தொகுப்பில் வெள்ளரிக்காய் வைத்து சாம்பார் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: cucumber Sambar
Yield: 4 People
Calories: 65kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய வெள்ளரிக்காய்
  • 1 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் சேர்த்து நான்கு விசில் வரை விட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • பின் வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,‌சீரகம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்‌ வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, வெள்ளரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • வெள்ளரிக்காய் வெந்ததும் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இது கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து கலந்து விடவும். சாப்பார் ஒரு கொதி வந்தவுடன் மல்லி இலை சேர்த்து இறக்கி விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 65kcal | Carbohydrates: 3.6g | Protein: 10.4g | Fat: 1.4g | Sodium: 6mg | Potassium: 147mg | Fiber: 1.5g | Vitamin A: 105IU | Vitamin C: 2.8mg | Calcium: 16mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : ருசியான மொச்சை பயறு சாம்பார் ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்! இனி உங்கள் வீட்டில் அடிக்கடி இதனை செய்வீர்கள்!