அசைவத்தில் தான் பிஷ் ஃபிங்கர்ஸ் கேள்விபட்டுருப்போம். சைவத்தில் கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒருமுறை செய்து பாருங்களேன். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான் . இட்லி அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்றால், இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் கறிவேப்பிலை, சில மசாலா சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே.
மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படி கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் செய்து பாருங்கள். இந்த கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒரு தனி சுவை இருக்கும்.இதற்கு தனியாக எந்த இணை உணவிற்கும் மெனக்கிட வேண்டாம். சுவையான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ஒரு ரெசிபி தான் இந்த கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ரொம்பவே சுலபமா அதே நேரத்தில் நினைத்த உடனே டக்குனு செய்யக் கூடிய ஒரு சூப்பரான டிஷ் தான் இந்த கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் வாங்க அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் | Curry Leaves Finger Idly
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 10 இட்லி
- 5 மிளகாய் வற்றல்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 10 கொத்து கறிவேப்பிலை
- 1/2 கொத்து கடுகு
- 1/2 தேக்கரண்டி கல் உப்பு
- 1 குண்டு மணி அளவு பெருங்காயம்
செய்முறை
- இட்லியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மிளகாய் வற்றலை போட்டு கருகவிடாமல் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே வாணலியில் தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- அதிலேயே சீரகத்தை போட்டு ஒரு நிமிடம் வறுத்து, சீரகம் வெடித்ததும் எடுத்து விடவும். பின்னர் வறுத்தவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.ஆறியதும்எடுத்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைக்கவும்.
- வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து, அதில் நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு முறை பிரட்டி விடவும்.
- பிறகு பொடித்த கறிவேப்பிலை பொடியை போட்டு பொடி இட்லியில் நன்கு சேரும் படி ஒன்றாக கிளறி விடவும். மேலே 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
- இப்போது சுவையான, ஆரோக்கியமான கறிவேப்பிலை இட்லி ஃபிங்கர்ஸ் ரெடி. மாலை நேரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி. காலையில் மீந்த இட்லியை வைத்தும் இதனை செய்யலாம்.