அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. மட்டன் எலும்பு குழம்பு சூப் மாதிரி தண்ணீர் தன்மையுடன் இருக்கும். அண்ணல் அதில் துவரம் பருப்பு சேர்த்து செய்தல் தாழ்ச்ச சுவையில் கொஞ்சம் சூடான சத்தத்திற்கு ஏற்ற வாறு இருக்கும். இது அலாதியான சுவையுடன் இருக்கும்.
துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மட்டன் எலும்பு சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும் . ஆட்டிறைச்சியில் செய்யப்படும் ஒவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு மாதிரியானதாக இருக்கும், ஆனால் சூடான துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்ரசம், நாவூற வைத்துவிடும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் | Toor Dal Mutton Rasam In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மட்டன் எலும்பு
- 100 கிராம் துவரம் பருப்பு
- 100 கிராம் தக்காளி
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 5 வத்தல் மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 2 பட்டை
- 1 பிரியாணி இலை
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
- 1 டீஸ்பூன் சோம்பு
- எண்ணெய் தேவையானஅளவு
செய்முறை
- சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மட்டன் எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
- அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளியையும் சேர்த்து வேதக்கவும் அடுத்து சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
- அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- இப்போது சுவையான துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் ரெடி