எவ்வளவு செய்தாலும் காலியாகும் சுவையான பருப்பு வடை ரைஸ் இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

நம்ம வீட்ல வித விதமான ரைஸ்கள் செய்து இருப்போம் இந்த மாதிரி ஒரு சாப்பாடு செய்தே இருக்க மாட்டோம். அந்த மாதிரி வித்தியாசமான ஒரு ரைஸ் தான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த பருப்பு வடை அப்படிங்கறது ஒரு உணவு எல்லாருக்குமே ரொம்ப ஃபேவரட்டான ஒரு உணவு. எல்லாருமே  மாலை நேர சிற்றுண்டி அப்படினு சொன்னாலே பருப்பு வடை சாப்பிடலாமா அப்படினுதா கேட்பாங்க அந்த அளவுக்கு எல்லோருக்கும் பருப்பு வடை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

அந்த மாதிரி பருப்பு வடை வாங்கியோ இல்ல வீட்ல செய்தோ சாப்பிட முடியாம அதிகமாயிடுச்சு அப்படின்னா அந்த  பருப்பு வடை என்ன பண்றது அப்படின்னு ரொம்ப யோசிச்சு இருக்கீங்களா அப்போ உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். இப்படி அதிகமா இருக்கும் பருப்பு வடை வெச்சு சூப்பரான சாதம் செய்திடலாம் அதுவும் எல்லாருக்கும் இந்த பருப்பு வடை ரைஸ் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

இப்படி வித்தியாசமான பேர்ல பருப்பு வஞை ரைஸ் மட்டும் நீங்க செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா எல்லாரும் கேட்பாங்க என்னது பருப்பு வடை ரைசா இதை எப்படி செய்தீங்க அப்படின்னு கேட்கிற அளவுக்கு ரொம்பவே நல்லா இருக்கும். ரெசிபி  மட்டும் வித்தியாசமா இருக்காது அதனுடைய சுவையும் எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச மாதிரி இருக்கும்.

அந்த மாதிரி சுவையான பருப்பு வடை ரைஸ் யாரும் செய்திருக்கவும் மாட்டாங்க வாழ்நாள்ல சாப்பிட்டு இருக்கக்கூட மாட்டாங்க. அந்த மாதிரி சுவையாய் இந்த பருப்பு வடை ரைஸை ரொம்பவே ஈஸியா வீட்ல செய்திறலாம். வாங்க இந்த பருப்பு வடை ரைசா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

பருப்பு வடை ரைஸ் | Dal Vada Rice Recipe In Tamil

வித்தியாசமான பேர்ல பருப்பு வஞை ரைஸ் மட்டும் நீங்க செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா எல்லாரும் கேட்பாங்கஎன்னது பருப்பு வடை ரைசா இதை எப்படி செய்தீங்க அப்படின்னு கேட்கிற அளவுக்கு ரொம்பவேநல்லா இருக்கும். ரெசிபி  மட்டும் வித்தியாசமா இருக்காது அதனுடைய சுவையும் எல்லாருக்கும்ரொம்பவே புடிச்ச மாதிரி இருக்கும். அந்த மாதிரிசுவையான பருப்பு வடை ரைஸ் யாரும் செய்திருக்கவும் மாட்டாங்க வாழ்நாள்ல சாப்பிட்டு இருக்கக்கூடமாட்டாங்க. அந்த மாதிரி சுவையாய் இந்த பருப்பு வடை ரைஸை ரொம்பவே ஈஸியா வீட்ல செய்திறலாம்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Dal Vada Rice
Yield: 4
Calories: 217kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 பருப்பு வடை
  • 1 கப் ரைஸ்
  • 1 வெங்காயம்
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் கரமசாலா
  • 1 ஸ்பூன் கடுகு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பருப்பு வடைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பருப்பு வடைகளை சேர்த்து ஒரு ஐந்து முதல் ஆறு நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும். மசாலாக்கள் பருப்பு வடைகளோடு கலக்க வேண்டும் அப்பொழுதுதான் பருப்பு வடை மேல் பகுதி மிருதுவாக மாறும்.
  • பருப்பு வடை மசாலாக்களுடன் நன்றாக கலந்த பிறகு அதில் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கிப் பரிமாறினால். சுவையான பருப்பு வடை ரைஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Cholesterol: 10mg | Sodium: 5mg | Potassium: 382mg | Fiber: 9g | Sugar: 2g