ருசியான தாபா ஸ்டைல் வெள்ளை குருமா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! வழக்காமான குருமாவை விட ருசியாக இருக்கும்!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் காலிஃபிளவர், காளான் போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி

By ·

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் காலிஃபிளவர், காளான் போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க. குருமா என்றாலே மிளகாய் தூள் மசாலா சேர்த்து செய்வது தானே வழக்கம். ஆனால் இந்த குருமாவுக்கு எந்த மசாலாவும் சேர்க்கப் போவதில்லை. அதிலும் பஞ்சாபி கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குருமா தயாராகிடும்.

பஞ்சாபி என்றாலே நம் கண்முன் வந்து நிற்பது தாபா ஸ்டைல் சமையல் தான். நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், பஞ்சாபி சமையலுக்கு ஈடாகாது. அதனாலேயே பஞ்சாபி ஸ்டைல் சமையல் உலகளவில் பெயர் பெற்று நாடெங்கும் முளைத்து விட்டன. அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனைத்து உணவிற்கும் ஏற்றவாறு வெள்ளை குருமா இன்று செய்வோம். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை இப்படி தாபா ஸ்டைல் முட்டை கிரேவி செஞ்சி பாருங்க! அட்டகாசமான ருசியில் இருக்கும்!

Recipes AMP · Quick view
View full