ருசியான தாபா ஸ்டைல் வெள்ளை குருமா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! வழக்காமான குருமாவை விட ருசியாக இருக்கும்!

- Advertisement -

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் காலிஃபிளவர், காளான் போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க. குருமா என்றாலே மிளகாய் தூள் மசாலா சேர்த்து செய்வது தானே வழக்கம். ஆனால் இந்த குருமாவுக்கு எந்த மசாலாவும் சேர்க்கப் போவதில்லை. அதிலும் பஞ்சாபி கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குருமா தயாராகிடும்.

-விளம்பரம்-

பஞ்சாபி என்றாலே நம் கண்முன் வந்து நிற்பது தாபா ஸ்டைல் சமையல் தான். நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், பஞ்சாபி சமையலுக்கு ஈடாகாது. அதனாலேயே பஞ்சாபி ஸ்டைல் சமையல் உலகளவில் பெயர் பெற்று நாடெங்கும் முளைத்து விட்டன. அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனைத்து உணவிற்கும் ஏற்றவாறு வெள்ளை குருமா இன்று செய்வோம். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

தாபா ஸ்டைல் வெள்ளை குருமா | Dhaba Style White Kurma Recipe In Tamil

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் காலிஃபிளவர், காளான் போன்ற காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்யுங்கள். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian, punjabi
Keyword: Dhaba Style White Kurma
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 6 பெரிய வெங்காயம்
  • 2 ஏலக்காய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 10 முந்திரி
  • நெய் தேவையான அளவு
  • 150 கி காளான்
  • 100 கி பன்னீர்
  • 100 கி காலிஃபிளவர்
  • 100 மிலி காய்ச்சிய பால்
  • 2 டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
  • 6 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் காளான், காலிஃபிளவர், பன்னீர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பச்சை மிளகாய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கசகசா சேர்த்து வதக்கி ஆற விடவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீரை சேர்த்து பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் காளான் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காளான் பாதி வெந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பின் குருமா கொதித்ததும் வறுத்த பன்னீரை சேர்த்து அதனுடன் பாலை ஊற்றி நன்கு கலந்து அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • அதன்பிறகு க்ரீம் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து, கலந்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தாபா ஸ்டைல் வெள்ளை குருமா தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 2.5g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 3.6g | Vitamin A: 60IU | Vitamin C: 25mg | Calcium: 404mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை இப்படி தாபா ஸ்டைல் முட்டை கிரேவி செஞ்சி பாருங்க! அட்டகாசமான ருசியில் இருக்கும்!