Home அசைவம் அடுத்தமுறை இப்படி தாபா ஸ்டைல் முட்டை கிரேவி செஞ்சி பாருங்க! அட்டகாசமான ருசியில் இருக்கும்!

அடுத்தமுறை இப்படி தாபா ஸ்டைல் முட்டை கிரேவி செஞ்சி பாருங்க! அட்டகாசமான ருசியில் இருக்கும்!

அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! அசைவத்தில் எந்த உணவை கொடுத்தாலும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் மீன், கரி வேறு ஏதும் வாங்க முடியாத பட்சத்திற்கு முட்டையை வைத்து தான் சமைப்போம். வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே வேண்டாம். அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதிலும் பஞ்சாபி கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குழம்பு தயாராகிடும். பஞ்சாபி என்றாலே நம் கண்முன் வந்து நிற்பது தாபா ஸ்டைல் சமையல் தான்.

-விளம்பரம்-

நாம் எவ்வளோ பெரிய ஃபைவ் ஸ்டார் உணவகங்களில் சென்று சாப்பிட்டாலும், பஞ்சாபி சமையலுக்கு ஈடாகாது. அதனாலேயே பஞ்சாபி ஸ்டைல் சமையல் உலகளவில் பெயர் பெற்று நாடெங்கும் முளைத்து விட்டன. அவ்வளவு புகழ்பெற்ற உணவுகளை நம் வீடுகளிலும் சமைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முட்டையைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அதில் சாதத்திற்கு ஏற்றவாறு முட்டை குழம்பு, முட்டை மசாலா இன்று செய்வோம். இப்படி செய்யும் முட்டை மசாலாவில் பல ஸ்டைல்கள் உள்ளன. வழக்கமாக முட்டை வைத்து பொரியல், பொடிமாஸ், ஆம்லெட், என்று பல விதங்களில் முட்டையை சமைத்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் ஒன்று தான் தாபா ஸ்டைல் முட்டை மசாலா.

இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

Print
No ratings yet

தாபா ஸ்டைல் முட்டை கிரேவி | Dhaba Style Egg Gravy Recipe In Tamil

அசைவம் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! அசைவத்தில் எந்த உணவை கொடுத்தாலும் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் மீன், கரி வேறு ஏதும் வாங்க முடியாத பட்சத்திற்கு முட்டையை வைத்து தான் சமைப்போம். வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே வேண்டாம். அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதிலும் பஞ்சாபி கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குழம்பு தயாராகிடும். அந்த வகையில் ஒன்று தான் தாபா ஸ்டைல் முட்டை மசாலா. இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையோடும் இருக்கும். இதனை ஒரு முறை செய்து பாருங்கள், இதன் ருசிக்கு அனைவரும் அடிமை ஆகி விடும் அளவிற்கு இதன் சுவை மிக பிரமாதமாக இருக்கும். மேலும் இதனையே அடிக்கடி செய்யுமாறு வீட்டில் இருப்புவர்கள் நிச்சயமாக கேட்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, punjabi
Keyword: Dhaba Style Egg Gravy
Yield: 4 People
Calories: 67.93kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 2 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்‌ மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு

தாளிக்க :

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  • முட்டை வெந்ததும் சூடான தண்ணீரை வடித்து விட்டு முட்டையில் குளிர்ந்த நீரை சேர்த்து சிறிது நேரம் கழித்து தோல் நீக்கி கொள்ளவும்.
  • ஒரு‌ மிக்ஸியில் தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்து அதனுடன் முட்டையை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை,‌பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் விழுதாக அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இவை நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
  • பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். கிரேவி நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும், வறுத்து வைத்துள்ள முட்டை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான தாபா ஸ்டைல் முட்டை கிரேவி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 67.93kcal | Carbohydrates: 2.6g | Protein: 6.64g | Fat: 4.57g | Sodium: 130mg | Potassium: 125mg | Vitamin C: 41mg | Calcium: 24.72mg | Iron: 3.75mg

இதனையும் படியுங்கள் : தாபா ஸ்டைல் புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் சுவையே தனி தான்!