Advertisement
சைவம்

வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!

Advertisement

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். குஸ்காவில் பல வகை உண்டு. அதில் பிளேன் குஸ்கா, பன்னீர் குஸ்கா, மஷ்ரூம் குஸ்கா, மட்டன் குஸ்கா, மற்றும் தக்காளி குஸ்கா பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா.

குஸ்கா செய்த பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் குஸ்கா சாப்பிட்டாலும் திகட்டாது. நீங்கள் குஸ்கா பிரியரா? அதுவும் திண்டுக்கல் ஸ்டைலில் செய்யப்படும் பிரியாணியை விரும்பி சாப்பிடுபவரா? உங்களுக்கு இந்த திண்டுக்கல் குஸ்காவை வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்காக இந்த திண்டுக்கல் குஸ்காவை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த குஸ்கா செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த குஸ்காவை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த குஸ்காவின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான குஸ்காவை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Advertisement

திண்டுக்கல் குஸ்கா | Dindigul Kuska Recipe In Tamil

Print Recipe
குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதலில் செய்வது இந்த குஸ்கா தான். அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன், மட்டன் என விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்கள். சைவ பிரியர்களுக்காகவும் சில பிரியாணி வகைகள் உண்டு அதில் முக்கியமானது இந்த குஸ்கா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
Advertisement
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். குஸ்காவில் பல வகை உண்டு. அதில் பிளேன் குஸ்கா, பன்னீர் குஸ்கா, மஷ்ரூம் குஸ்கா, மட்டன் குஸ்கா, மற்றும் தக்காளி குஸ்கா பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Dindigul Kuska
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings
Advertisement
4 People
Calories 173

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 2 கப் சீரக சம்பா அரிசி
  • 2 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் புதினா,கொத்தமல்லி
  • 1 பிரியாணி இலை
  • 1 அன்னாசி பூ
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1/4 கப் தயிர்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

அரைக்க :

  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கப் புதினா, கொத்தமல்லி
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 பட்டை

Instructions

  • முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாச்சி பூ சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு, தயிர், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும், அரிசியை சேர்த்து நன்கு கிளறி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான திண்டுக்கல் குஸ்கா தயார். இதற்கு வேகவைத்த முட்டை, கத்திரிக்காய் தொக்கு, வெங்காய பச்சடி வைத்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 173kcal | Carbohydrates: 3.4g | Protein: 16.4g | Fat: 4g | Sodium: 54mg | Potassium: 164mg | Fiber: 4.4g | Vitamin A: 128IU | Vitamin C: 80mg | Calcium: 28mg | Iron: 13mg

Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!

பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஜூன் 2024!

மேஷம் இன்று உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டு திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள். இன்று உங்களுக்கு…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் குடைமிளகாய் இருந்தால் வாங்கினால் இந்த குடைமிளகாய் மசாலா தோசை செய்து பாருங்கள் அட்டகாசமாக!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

1 நாள் ago

தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன்…

3 நாட்கள் ago

ஜூன் 27 புதன் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு…

4 நாட்கள் ago

பஞ்சாபி ஸ்டைல் தம் ஆலு கிரேவி இப்படி செய்து பாருங்கள் இரண்டு சப்பாத்தி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

4 நாட்கள் ago