இந்த சம்மரில் அவசியம் சுவையான டிராகன் ப்ரூட் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் டிராகன் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். மில்க
மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் டிராகன் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும். மில்க் ஷேக்கில் பனானா மில்க்க்ஷேக், ஸ்ட்ராபெர்ரி மில்க்க்ஷேக், வெண்ணிலா மில்க்க்ஷேக், சாக்லேட் மில்க்ஷேக் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் டிராகன் ப்ரூட் வைத்து சூப்பரான மில்க் ஷேக் ரெசிபியை காண்போம். இந்த பழம் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. இதைத் தவிர பொட்டாசியம் மற்றும் மக்னேசியம் தாது நிறைந்துள்ளது.
கலோரி அளவு குறைவாகவும் மிகுந்த நீர் சத்து நிரம்பியதாகவும் இருக்கிறது. இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக டிராகன் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் சுவை மிகுந்த இந்த டிராகன் பழங்களை கொண்டு நிறைய வித்தியாசமான ரெசிபிகளையும் செய்யலாம். அந்த வகையில் டிராகன் ப்ரூட்டைக் கொண்டு தயாரிக்கப்படும் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. இந்த மில்க் ஷேக் செய்வதற்கு பால், டிராகன் ப்ரூட் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டிலயே மில்க் செய்யாலம் சுவையான பப்பாளி நட்ஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!