முருங்கைக்காய் மசாலா பொரியல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும் சுவையில்!

- Advertisement -

முருங்கைக்கு தனி மனமும்,தனி சுவை உண்டு. ஒரே ஒரு முருங்கைக்காய் சாம்பாரில் போட்டால் அந்த சாம்பார் வாசம் ஊரையே கூப்பிடும். அதுபோல்  இந்த முருங்கைககாயை வைத்து எந்த சமையல் செய்தாலுமே அதன் சுவை நன்றாகவே இருக்கும். இப்போதும் இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த முருங்கைக்காயை வைத்து அருமையான ஒரு முருங்கை மசாலாப்பொரியல் செய்வது எப்படி சமைப்பது என்று தான் இப்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

முருங்கை மசாலாப்பொரியல் | Drumstick Masala In Tamil

முருங்கைக்கு தனி மனமும்,தனி சுவை உண்டு. ஒரே ஒரு முருங்கைக்காய் சாம்பாரில் போட்டால் அந்த சாம்பார் வாசம் ஊரையே கூப்பிடும். அதுபோல்  இந்த முருங்கைககாயை வைத்து எந்த சமையல் செய்தாலுமே அதன் சுவை நன்றாகவே இருக்கும். இப்போதும் இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த முருங்கைக்காயை வைத்து அருமையான ஒரு முருங்கை மசாலாப்பொரியல் செய்வது எப்படி சமைப்பது என்று தான்இப்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: dinner, LUNCH, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: முருங்கைகாய்
Yield: 4
Calories: 64kcal

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 முருங்கைக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • உப்பு தேவைக்கு
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கறிவேப்பிலை சிறிதளவு

அரைக்க

  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சோம்பு

செய்முறை

  • முருங்கைக்காயை விரல் நீளத் துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
  • அரைக்கக் கூறியுள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி வெங்காயத்தை வதக்குங்கள்.
  • பிறகு தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பின்னர் முருங்கைக்காய், அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி, மூடி வையுங்கள். தீ மிதமாக எரிய வேண்டும். முருங்கைக்காய் வெந்ததும், தீயை அதிகப்படுத்தி, கறிவேப்பிலை தூவி, சுருளக் கிளறி இறக்குங்கள்.

Nutrition

Serving: 100g | Calories: 64kcal | Carbohydrates: 8.26g | Protein: 9.4g | Fat: 1.4g | Vitamin A: 378IU | Vitamin C: 51.7mg | Calcium: 185mg | Iron: 4mg
- Advertisement -