முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. மிக எளிதில் கிடைக்கக்கூடிய அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள காய்களில் முருங்கைக்காய்க்கு என்றுமே இடமுண்டு. உடலுக்கு நல்ல வலுவை கொடுக்கும் முருங்கைக்காய், மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகிறது.
இதனை வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என பார்க்கலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாயில் பிரசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். கடைகளில் விற்கும் பாட்டில் ஊறுகாயில் சுவை அதிகரிப்பதற்காக சுவையூட்டிகள் சேர்ப்பார்கள். அது உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும். மேலும், நிறைய பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
இனி வரப்போகிற வெயில் காலத்தில் கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள முருங்கைக்காய் ஊறுகாய் சூப்பரான காமினேஷன். முருங்கைக்காய் சாம்பார், அதைவிட்டா முருங்கைக்கீரை பொரியல், முருங்கையில் வேற என்ன செய்துட முடியும் என அலுத்து கொள்பவர்களுக்கு தான் இந்த முருங்கைக்காய் ஊறுகாய் ரெசிபி. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்காயை வைத்து வீட்டிலேயே சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முருங்கை ஊறுகாய் | Drumstick Pickle Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கப் புளி
- கடலை எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 5 முருங்கைக்காய்
- 1 கொத்து கறிவேப்பில்லை
- 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் சோம்பு
- 3 வர மிளகாய்
- 20 பல் பூண்டு
செய்முறை
- முதலில் முருங்கைக்காயை தண்ணீரில் அலசி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முருங்கைக்காயை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் பூண்டை சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பின் அதே கடாயில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் சோம்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பில்லை, வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் புளி கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள கடுகு தூள் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் வதக்கி வைத்துள்ள முருங்கைக்காய் மற்றும் பூண்டு சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்காய் ஊறுகாய் தயார். இந்த ஊறுகாயை 10 நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!