காலை நேரத்தில் சாப்பிட முருங்கைக்காய் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டது. அனைத்து இடங்களிலும் முருங்கைக்காய் மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. இந்த நேரத்தில் முருங்கைக்காய் வாங்கி இது போல சாதம் செய்து பாருங்கள் , அடிக்கடி இப்படி செய்து குடும்படி குழந்தைகள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் . இனி  மத்திய உணவிற்கு டிபன் பாக்ஸில் என்ன செவிடு தருவது என்று குழம்ப வேண்டாம் . அந்த அளவிற்கு சுவையான ஒரு முருங்கைக்காய் சாதம் .வாங்க இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் .

-விளம்பரம்-
Print
4.34 from 3 votes

முருங்கைக்காய் சாதம் | Drumstick Rice Recipe In Tamil

முருங்கைக்காய் சீசன் தொடங்கி விட்டது. அனைத்து இடங்களிலும் முருங்கைக்காய் மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. இந்த நேரத்தில் முருங்கைக்காய் வாங்கி இது போல சாதம் செய்து பாருங்கள் , அடிக்கடி இப்படி செய்து குடும்படி குழந்தைகள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள் . இனி  மத்திய உணவிற்கு டிபன் பாக்ஸில் என்ன செவிடு தருவது என்று குழம்ப வேண்டாம் . அந்த அளவிற்கு சுவையான ஒரு முருங்கைக்காய் சாதம் .இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Drumstick Biryani
Yield: 4
Calories: 64kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 2 கப் முருங்கைக்காய் விழுது
  • 1 வெங்காயம்
  • 1/2 கப் தேங்காய்த் துருவல்
  • 5 மிளகாய் வற்றல்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1/4 கப் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்துமல்லி சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • அரிசியை சற்று உதிரிப் பதத்தில் வடித்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை வேக வைத்து விழுதை எடுத்து சிறிது உப்பு சேர்த்து மசிக்கவும். தேங்காய்த் துருவலையும், மிளகாய் வற்றல்களையும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயைக் காய வைத்து அதில் கடுகு போட்டு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைத் போட்டு பொன்னிறத்தில் வறுக்கவும்.
  • பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.  நன்கு வதக்கிய வெங்கயாத்துடன் முருங்கைக் காய் விழுது, புளி விழுது, பொடிகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.  வதக்கிய விழுதில் சாதத்தைச் சேர்த்து நீர் வற்றும் வரை வேக விடவும்.  கறிவேப்பிலை,கொத்துமல்லி தழை தூவி இறக்கிவிடவும்.  அவ்வளவுதான் சத்தான சாதம் தயார். தயிர்ப் பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 64kcal | Carbohydrates: 8.28g | Protein: 9.4g | Fat: 1.4g | Fiber: 2g | Vitamin A: 378IU | Vitamin C: 51.7mg | Calcium: 185mg | Iron: 4mg
- Advertisement -