Home சட்னி ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ரொம்பவே சிம்பிளான ஒரு வர மிளகாய் துவையல் எப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி ஒரு தடவை வர மிளகாய் துவையல் செய்து சாப்பிட்டு பாருங்க. நல்லா காரசாரமா இட்லி தோசைக்கு வெச்சு சாப்பிடுவதற்கு செம்ம சூப்பரா இருக்கும். வெறும் நாலு பொருட்கள் மட்டும் இந்த துவையலுக்கு இருந்தா போதும். சூப்பரான காரசாரமான ஒரு சைட் டிஷ் செஞ்சுக்கலாம்.

-விளம்பரம்-

இந்த துவையல்ல அரைச்சு அதுல நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டால் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். நம்மளோட முன்னோர்கள் எல்லாம் இந்த வர மிளகாய் துவையல் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவாங்க அதே மாதிரி நீங்களும் உங்க வீட்ல அம்மிக்கல் இருந்தா அம்மியில வச்சு அரைச்ச இந்த துவையல இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிட்டு பாருங்க சொர்க்கமா இருக்கும்.

உங்க வீட்டில அம்மி இல்லனாலும் பரவால்ல மிக்ஸி ஜார்லையே சேர்த்து அரைச்சு சாப்பிட்டு பாருங்க. அது உன் டேஸ்டா தான் இருக்கும் ஆனா அம்மிக்கல்ல வச்சு அரச்சு சாப்பிடுவது இன்னும் டேஸ்டா இருக்கும். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்களால டக்குனு எந்த சட்னியும் பெருசா செய்ய முடியல அப்படின்னா அவசரத்துக்கு இந்த துவையல் செஞ்சு சாப்பிடலாம். ரொம்ப வே சிம்பிளா ஈஸியா நாளை பொருள் வைத்து செய்யக்கூடிய இந்த வரமிளகாய் துவையல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

Print
4 from 1 vote

வர மிளகாய் துவையல் | Dry Chilli Thuvayal Recipe In Tamil

நல்லா காரசாரமா இட்லி தோசைக்கு வெச்சு சாப்பிடுவதற்கு செம்ம சூப்பரா இருக்கும். வெறும் நாலு பொருட்கள்மட்டும் இந்த துவையலுக்கு இருந்தா போதும். சூப்பரான காரசாரமான ஒரு சைட் டிஷ் செஞ்சுக்கலாம். உங்க வீட்டில அம்மி இல்லனாலும் பரவால்ல மிக்ஸி ஜார்லையேசேர்த்து அரைச்சு சாப்பிட்டு பாருங்க. அது உன் டேஸ்டா தான் இருக்கும் ஆனா அம்மிக்கல்லவச்சு அரச்சு சாப்பிடுவது இன்னும் டேஸ்டா இருக்கும். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்களாலடக்குனு எந்த சட்னியும் பெருசா செய்ய முடியல அப்படின்னா அவசரத்துக்கு இந்த துவையல்செஞ்சு சாப்பிடலாம்.
Prep Time10 minutes
Total Time10 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Dry Chilli Thuvayal
Yield: 4

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 12 வர மிளகாய்
  • 7 பல் பூண்டு
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  இந்த துவையல் செய்வதற்கு அம்மி இருந்தால் மிகவும் நல்லது.
  • அம்மியில் முதலில் காய்ந்த மிளகாயை வைத்து நன்றாக இடித்து கொள்ளவும்
  • பிறகு பூண்டு புளி சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அம்மியிலேயே வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  •  
    அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறினால் சுவையான வரமிளகாய் துவையல் தயார்

இதையும் படியுங்கள் : சாதத்துக்கு குழம்பு வைக்க நேரம் இல்லனா இந்த பருப்பு துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!