பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா சட்னி வெச்சா தான் சாப்பிடுவதற்கு நல்லா அந்த வகையில் தினமும் என்னடா சட்னி செய்வது அப்படின்னு யோசிச்சா அழுது போய்ட்டீங்களா அப்போ உங்களுக்காக தான் இந்த சூப்பரான உளுந்து சட்னி. இந்த சட்னி தக்காளி சட்னி மாதிரி ஏதாவது இருக்கும் ஆனால் டேஸ்ல கொஞ்சம் டிஃபரென்ட் இருக்கும்.
இந்த உளுந்து சட்னி அரைச்சா இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு இந்த உளுந்து சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும். பொதுவாவே உளுந்து பெண்கள் அடிக்கடி அவங்க உணவுல சேர்த்துக்கணும். உளுந்து களி உளுந்து புட்டு உளுந்து கஞ்சி அப்படின்னு உளுந்து சம்பந்தமான இந்த உணவுகள் எல்லாத்தையும் நம்ம சாப்பாடுல சேர்த்துகிறதால நம்ம உடம்புல எலும்புகள் ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.
பொதுவா பூப்பெய்த பெண்கள் அடிக்கடி இந்த உளுந்து சாப்பிடுவதால் அவங்க உடம்புக்கு ரொம்பவே நல்லது. அந்த வகையில இந்த மாதிரி உளுந்து புட்டு உளுந்து கஞ்சி உளுந்து களி இதெல்லாம் பிடிக்காதவங்க உளுந்து நிறைய சேர்த்து இந்த மாதிரி ஒரு சூப்பரான உளுந்து சட்னி சாப்பிட்டு பாருங்க. உங்க வீட்ல உளுந்து நிறைய இருந்தா அப்போ கண்டிப்பா இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிடுங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த செம சூப்பரான உளுந்து சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
உளுந்து சட்னி | Urad dal recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் உளுந்தம் பருப்பு
- 2 தக்காளி
- 3 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 5 பல் பூண்டு
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
- பிறகு அதே கடாயில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு அனைத்தையும் சேர்த்துநன்றாக வதக்கி எடுக்கவும்
- மிக்ஸி ஜாரில் உளுந்து சேர்த்து அரைத்ததும் பிறகு வதக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து சிறிதளவுகொத்தமல்லி இலைகள் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான உளுந்து சட்னி தயார்