இனி சப்பாத்திக்கு குருமா தேவயில்லை இப்படி முட்டை சப்பாத்தி மட்டும் செய்து சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

சுலபமாக வீட்டில் இருப்பவர்கள் சமைக்கக்கூடிய ஒரு உணவு என்றால் அது முட்டை. நிறைய பேருக்கு இது பிடித்த உணவுப் பொருள் என்று கூட சொல்லலாம். இந்த முட்டையை வைத்து விதவிதமாக சமைக்கலாம். இன்று நாம் பார்க்கப்போகும் சமையல் முட்டை சப்பாத்தி. இதை சப்பாத்தியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

முட்டை வாசம் பிடிக்கும், முட்டை பிடிக்கும் என்பவர்கள் மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்க்கலாம். முட்டையில் லேசாக வாடை வீசினாலே எனக்கு பிடிக்காதுபா. அப்படி என்று சொல்பவர்கள் இந்த சமையலை  செய்து பாருங்கள். சப்பாத்தி யுடன் சேர்ந்து வெந்து  முட்டை வாடை எதுவுமின்றி அருமையாக இருக்கும். ஆசை ஆசையாய் முட்டை சாப்பிடுபவர்களுக்கு இந்த சமையல் குறிப்பு.

- Advertisement -

முட்டையை வைத்து வித விதமாக எத்தனையோ டிஷஸ் செய்யலாம். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இன்று நாம் பார்க்கப்போவது எளிமையான முறையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது என்றுதான்.  எல்லோருக்கும் பிடித்த சுவையில் செய்துவிடலாம். முட்டையே எனக்கு பிடிக்காது என்பவர் கூட இப்படி முட்டை சப்பாத்தி சமைத்துக் கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சண்டேவில் இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

முட்டை சப்பாத்தி | Egg Chappati Recipe In Tamil

முட்டையை வைத்து வித விதமாக எத்தனையோ டிஷஸ்செய்யலாம். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும்ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்டகொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இன்று நாம் பார்க்கப்போவதுஎளிமையான முறையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது என்றுதான்.  எல்லோருக்கும் பிடித்த சுவையில் செய்துவிடலாம்.முட்டையே எனக்கு பிடிக்காது என்பவர் கூட இப்படி முட்டை சப்பாத்தி சமைத்துக் கொடுத்தால்நிச்சயம் சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சண்டேவில் இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம்கை கொடுக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Egg Chappathi
Yield: 3
Calories: 240kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெ.வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன்  மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி தழை, சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவைக்கு
  • எண்ணெய் தேவைக்கு
  • 10 சப்பாத்தி

செய்முறை

  • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
  • வெங்காயம் சற்று வதங்கியதும் இறக்கி ,ஆறியவுடன் அதில் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
  • அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.
  • அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும். அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
  • ருசியான முட்டை சப்பாத்தி ரெடி

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg