வீட்டில் முட்டையும், உருளைக்கிழங்கும் இருந்தால் சட்டுன்னு இப்படி ஒரு கட்லெட் ரெசிபியை செய்து பாருங்க!

- Advertisement -

கட்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது. மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது உடனே செய்து அசைத்தி விடக்கூடிய இந்த
முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்ய இருக்கிறோம். வித்தியாசமான சுவை உள்ள இந்த முட்டை கட்லெட் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோரும் உங்களை பாராட்டி தள்ளிடுவாங்க!

-விளம்பரம்-

குழந்தைகளுக்காகவே சமையலறையில் நேரம் செலவிடும் தாய்மார்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுவையுடன் ஆரோக்கியம் உள்ளதுமான உணவுகளை தேடி தேடி சமைப்பதுண்டு. குழந்தைகளுக்கான புரோட்டின் சத்து நிறைந்துள்ள முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான ஒருவித கட்லட் செய்யும் முறையை தான் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

முட்டை கட்லெட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. . . சுவையான சாப்பிட மொறுமொறு வென்று இருக்கும் இந்த முட்டை கட்லெட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Print
No ratings yet

முட்டை கட்லெட் | Egg Cutlet Recipe In Tamil

முட்டை கட்லெட்ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில்பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும்.  திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக  செய்வதற்கு ஏற்றது. . . முட்டை மற்றும்உருளைக்கிழங்கை வைத்து செய்ய இருக்கிறோம். வித்தியாசமான சுவை உள்ள இந்த முட்டை கட்லெட்இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோரும் உங்களை பாராட்டி தள்ளிடுவாங்க!சுவையான சாப்பிட மொறுமொறுவென்று இருக்கும் இந்த முட்டை கட்லெட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Snack
Cuisine: tamilnadu
Keyword: Egg Cutlet
Yield: 4
Calories: 120kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  • 1 முட்டை கெட்டியாக வேக வைத்தது
  • 3/4 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி
  • 1/4 தேக்கரண்டி பொடி உப்பு
  • 1 தேக்கரண்டி பால்
  • 1 மேஜைக்கரண்டி கார்ன்பிளார்
  • 1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
  • 1/2 கப் உலர்ந்த ரொட்டித்தூள்
  • 200 மிலி நெய் அல்லது எண்ணெய்

செய்முறை

  • வேக வைத்த முட்டையின் ஓட்டை உரித்து எட்டு துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை மெதுவாகும் வரை வேக வைத்துத் தோலுரித்துச் சூட்டுடன் பால், வெண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு மாவாகக் கட்டியின்றிப் பிசையவும்.
  • கையில் கார்ன்பிளார் மாவுதொட்டுக் கொண்டு உருளைக் கிழங்கு கலவையைக் கமலாப் பழ அளவு உருண்டைஎடுத்துக் கிண்ணம் போல் செய்து ஒரு முட்டைத் துண்டை உருண்டைக்குள் வைத்து மூடி வெடிப்பின்றி உள்ளங்கையால் தட்டவும்.
  • கார்ன்பிளார் மாவில் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுத் தோசை மாவு போல் கரைக்கவும்.
  • வாணலியில் நெய்யை ஊற்றிப் புகை வந்ததும் இந்த கட்லெட்'டை கார்ன்பிளார் மாவில் தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி நெய்யில் இரண்டு பக்கமும்பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  •  
    கட்லெட் மீது ரொட்டித்தூள் படிந்து இருக்கும் படி அமுக்கவும். மாவாகப் பிசைந்த உருளைக்கிழங்கு தளர்த்தியாக இருந்தால் தேவையான அளவு கார்ன்பிளார் மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கலாம்.
  • சுவையான முட்டை கட்லெட் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 120kcal | Carbohydrates: 45g | Protein: 5.5g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 2896.8mg | Fiber: 6.8g