Home அசைவம் இப்படி கூட முட்டை குழம்பு செய்யலாமா ? ருசியான உடைத்து ஊற்றிய முட்டை குருமா இப்படி...

இப்படி கூட முட்டை குழம்பு செய்யலாமா ? ருசியான உடைத்து ஊற்றிய முட்டை குருமா இப்படி செய்து பாருங்க!

உடைத்துவிட்ட முட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குருமா வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குருமா உடைத்து ஊற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும் மிக விருப்பமாக சாப்பிடுவார்

-விளம்பரம்-

இந்த   சுவையான உடைத்து ஊற்றி குருமா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம். முட்டையை உடைத்து கெட்டியான குருமா போட்டு கொதிக்க விட்டால் போதும் முட்டை குருமா ரொம்பவே டேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். முட்டை அவித்து சேர்த்தால் பலருக்கும் பிடிக்காமல் போய்விடும்! ஆனால் இது போல் உடைத்து ஊற்றி  நாம் குழம்பு வைக்கும் பொழுது எல்லோருமே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
2.80 from 5 votes

உடைத்துவிட்ட முட்டை குருமா | Egg Drop Curry Recipe In Tamil

உடைத்துவிட்டமுட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லதுஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடியசுலபமான குருமா வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குருமாஉடைத்து ஊற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும்மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த   சுவையான உடைத்துஊற்றி குருமா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu, LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Egg Kuruma
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • முட்டை
  • வெங்காயம்
  • தக்காளி
  • இஞ்சி, பூண்டு விழுது
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள்
  • கரம் மசாலா தூள்
  • தேங்காய்ப்பால்
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லித் தழை சிறிது

செய்முறை

  • வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.  ஒருமுட்டையை மட்டும் உடைத்து தனியாக அடித்து வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு குழைய வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து கிளறிவிடவும்.  அத்துடன்ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் நன்கு கொதித்து பச்சை வாசனை அடங்கியதும் தீயைக் குறைத்துவிட்டு தேங்காய்ப் பால் ஊற்றி மூடியிடாமல் பாத்திரத்தை திறந்து வைத்து 5 நிமிடங்கள் சூடாக்கவும்.
  • சூடானதும் முட்டைகளை ஒவ்வொன்றாக கவனமாக உடைத்து ஊற்றவும். அனைத்து முட்டைகளையும் ஊற்றிய பிறகு தனியாக அடித்து வைத்துள்ள முட்டையை குழம்பு முழுவதிலும் பரவலாக ஊற்றவும்.
  • முட்டையை ஊற்றிய பிறகு கரண்டியால் கலந்து விடக்கூடாது.  அடுப்பை10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்திருந்து முட்டை வெந்ததை சரிபார்த்து இறக்கவும்.சுவையான உடைத்துவிட்ட முட்டை குருமா தயார்.கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

செய்முறை குறிப்புகள்

ப்ளைன் சாதம், புலால் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.5g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg