Advertisement
அசைவம்

ருசியான முட்டை – காலிஃபிளவர் கூட்டு பொரியல் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!

Advertisement

முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செயது

சாப்பிடலாம் .சுவையான முட்டை – காலிஃபிளவர் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

முட்டை – காலிஃபிளவர் பொரியல் | Egg – Kali Flower Poriyal Recipe in Tamil

Print Recipe
முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செயது சாப்பிடலாம் .சுவையான முட்டை – காலிஃபிளவர் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword poriyal, பொரியல்
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 4 முட்டை
  • 2 cup காலிஃபிளவர்
  • 1 வெங்காயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tsp இஞ்சி
  • 2 சோம்பு
  • 4 பூண்டு
  • 11 கறிவேப்பிலை
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 1 tsp மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement

Instructions

  • காலிஃபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். 
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
  • சிவந்து மணம் வந்தவுடன், முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து, தூள் தூளாகச் செய்து கிளறவும். 
  • 5 நிமிடங்கள் கிளறிய பின் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவிடவும்.சுவையான முட்டை – காலிஃபிளவர் பொரியல் தயார் .

Nutrition

Serving: 500gm | Calories: 649kcal | Carbohydrates: 24g | Sodium: 649mg | Potassium: 327mg | Calcium: 36mg

இதையும் படியுங்கள்: காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

2 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

3 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

4 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

5 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

7 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

8 மணி நேரங்கள் ago