- Prep
- 20 min
- Cook
- 15 min
- Total
- 35 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். முட்டை விரும்பிகள் இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கி மசாலாக்கள் எல்லாம் போட்டு சூப்பரான முட்டை – காலிஃபிளவர் பொரியல் ரொம்பவே சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தயார் செயது
சாப்பிடலாம் .சுவையான முட்டை – காலிஃபிளவர் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த முட்டை – காலிஃபிளவர் பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்: காலிப்ளவர் 65 இனி இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
காலிஃபிளவரை நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீர்விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் ஊற்றி, சிறிது மஞ்சள் தூளைப் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
சிவந்து மணம் வந்தவுடன், முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து, தூள் தூளாகச் செய்து கிளறவும்.
5 நிமிடங்கள் கிளறிய பின் வேகவைத்துள்ள காலிபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், நன்றாகக் கிளறி வாணலியை இறக்கிவிடவும்.சுவையான முட்டை - காலிஃபிளவர் பொரியல் தயார் .






