Advertisement
அசைவம்

முட்டை மிளகு வறுவல் ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! காரசாரமான ருசியில் அட்டகாசமாக இருக்கும்!

Advertisement

முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. முட்டை உணவுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், முட்டை குழம்பு, கிரேவி குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான முட்டை மிளகு வறுவல். பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை மிளகு வறுவல் செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். சாதரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட வெரைட்டியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள் கூடுதல் சத்தும் கிடைக்கும்.

வழக்கமான முட்டை மாசால போல் இல்லாமல், இது மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் ஈசிதான். வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். கூடவே ஒரு மிளகு ரசம் வைத்து விட்டால் சண்டே அன்று இப்படி ஒரு சாப்பாட்டை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். இந்த முட்டை மிளகு வறுவல் சப்பாத்தி தோசை மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் காய்கறிகளை நாம் நறுக்கி விட்டால் போதும் இதை வெறும் 15 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். முட்டைகளில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவை நம் உடம்புக்கு சத்தானதும் கூட. இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

முட்டை மிளகு வறுவல் | Egg Pepper Fry Recipe In Tamil

Advertisement
Print Recipe
முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. முட்டை உணவுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், முட்டை குழம்பு,
Advertisement
கிரேவி குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான முட்டை மிளகு வறுவல். பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை மிளகு வறுவல் செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் காய்கறிகளை நாம் நறுக்கி விட்டால் போதும் இதை வெறும் 15 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Egg Pepper Fry
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 67.93

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 தோசைக்கல்
  • 1 வாணலி

Ingredients

  • 3 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 2 தக்காளி
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் முட்டைகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து அதனை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் முட்டைகளை தோசை தவாவில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து இரண்டு பக்கமும் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவல், தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் தக்காளியை தனியாக மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ‌காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மசாலாவை சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்ததும் ரோஸ்ட் செய்த முட்டைகளை சேர்த்து நன்கு கலந்து கெட்டியாகும் வரை வேக வைத்து சிறிதளவு மிளகுத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான முட்டை மிளகு வறுவல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 67.93kcal | Carbohydrates: 1.36g | Protein: 6.64g | Fat: 4.57g | Sodium: 168mg | Potassium: 171mg | Vitamin A: 79IU | Calcium: 24.72mg | Iron: 2.91mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கிரேவி கூட மிஞ்சாது!

Advertisement
Prem Kumar

Recent Posts

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 நிமிடங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

4 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

4 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

4 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

6 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

6 மணி நேரங்கள் ago