- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
முட்டை ஒரு சத்தான உணவுப் பொருள். அனைத்து வயதினரும் முட்டையை உண்ணலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. முட்டை உணவுகளில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், முட்டை குழம்பு, கிரேவி குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான முட்டை மிளகு வறுவல். பெரும்பாலான நபர்கள் அவித்த முட்டையை பெரிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த முட்டை மிளகு வறுவல் செய்து கொடுத்தால் ருசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். சாதரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட வெரைட்டியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலுடன் சாப்பிடுவார்கள் கூடுதல் சத்தும் கிடைக்கும்.
வழக்கமான முட்டை மாசால போல் இல்லாமல், இது மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் ஈசிதான். வெள்ளை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். கூடவே ஒரு மிளகு ரசம் வைத்து விட்டால் சண்டே அன்று இப்படி ஒரு சாப்பாட்டை வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். இந்த முட்டை மிளகு வறுவல் சப்பாத்தி தோசை மற்றும் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் காய்கறிகளை நாம் நறுக்கி விட்டால் போதும் இதை வெறும் 15 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். முட்டைகளில் உடம்பிற்கு மிகவும் அவசியமான புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவை நம் உடம்புக்கு சத்தானதும் கூட. இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கிரேவி கூட மிஞ்சாது!
Ingredients
Method
முதலில் முட்டைகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து அதனை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் முட்டைகளை தோசை தவாவில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து இரண்டு பக்கமும் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், சோம்பு, தேங்காய் துருவல், தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் தக்காளியை தனியாக மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மசாலாவை சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை மூடி போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்ததும் ரோஸ்ட் செய்த முட்டைகளை சேர்த்து நன்கு கலந்து கெட்டியாகும் வரை வேக வைத்து சிறிதளவு மிளகுத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான முட்டை மிளகு வறுவல் தயார்.






