நமது வீட்டில் முட்டை இருந்தாலே போதும் பாதி கவலை தீர்ந்து விடும். முட்டை சமையல் செய்வதும் மிகவும் சுலபம், அத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டை செய்தால் எந்த விதமான கஷ்டமும் இல்லாது சாப்பிட்டு விடுவார்கள்.முட்டை ஆரோக்கியமான உணவும் கூட, ஆகையால் இல்லத்தரசிகளுக்கு வீட்டில் முட்டை இருந்தாலே பாதி வேலை குறைந்த மாதிரி. நம்ம வீட்ல ஒரே மாதிரி பிரியாணி, தக்காளி சாதம் செய்வோம். ஆனால் அது எல்லாமே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு.
புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாமா, யோசிப்பவர்க்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். முட்டையை வைத்து ஒரு புலாவ் செய்து கொடுத்தால் வேலையும் சுலபம் மதியம் டிபன் பாக்ஸ் காலியாகிவிடும். வீட்டில் உள்ள அனைவரும் மிச்சம் வைக்காமல் முழுமையாக சாப்பிடுவதுடன், நமக்கு பாராட்டும் கிடைத்து விடும்.வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
முட்டை புலாவ் | Egg Pulao Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 முட்டை
- 1 கப் சாதம்
- 2 பச்சை மிளகாய்
- 10 சின்ன வெங்காயம்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1/2 மேசைக்கரண்டி நெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 மேசைக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.
- அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- சாதத்துடன்முட்டை சேர்ந்து பொல பொல வென்று வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விடவும். சுவையா முட்டை புலாவ் ரெடி.