பாரம்பரிய முறையில் சுவையான பிடி கருணைக்கிழங்கு மசியல் இப்படி சுவையாக செய்து அசத்துங்கள்!!!

- Advertisement -

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு மரவள்ளிக்கிழங்கு என கிழங்கு வகைகளில் நிறைய இருந்தாலும் கருணை கிழங்கில் புளி குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும். சுடு சாதத்தில் இந்த கருணைக்கிழங்கு குழம்பு வைத்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் ஒரு தட்டு சாதம் சேர்த்து சாப்பிடலாம்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும். நாம் பெரும்பாலும் கருணைக்கிழங்கில் குழம்பு வைத்து மட்டும்தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் கருணைக்கிழங்கு நாம் செய்து சாப்பிடுவதற்கு நிறைய ரெசிபி உள்ளது. அந்த வகையில் நாம் இப்பொழுது கருணைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த கருணைக்கிழங்கு மசிகளை நாம் வெறும் சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்து அதனுடன் சைடு டிஷ் ஆகவும் சாப்பிடலாம் எப்படி சாப்பிட்டாலும் சுவை மிகவும் அருமையாகவும் அட்டகாசமாகவும் இருக்கும்.பொதுவாக இந்த மாதிரியான கிழங்கு வகைகள் சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் என்பார்கள். எனவே நாம் பழைய கிழங்கு பார்த்து வாங்கி சமைத்தால் நாக்கு அரிக்காது. இப்ப வாங்க இந்த சுவையான கருணைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கருணைக்கிழங்கு மசியல் | Elephant Yam Masiyal In Tamil

நாம் பெரும்பாலும்கருணைக்கிழங்கில் குழம்பு வைத்து மட்டும்தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் கருணைக்கிழங்குநாம் செய்து சாப்பிடுவதற்கு நிறைய ரெசிபி உள்ளது. அந்த வகையில் நாம் இப்பொழுது கருணைக்கிழங்குமசியல் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த கருணைக்கிழங்கு மசிகளைநாம் வெறும் சாதத்திலும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது சாம்பார் வைத்து அதனுடன்சைடு டிஷ் ஆகவும் சாப்பிடலாம் எப்படி சாப்பிட்டாலும் சுவை மிகவும் அருமையாகவும் அட்டகாசமாகவும்இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Karunaikilangu Masiyal
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ கருணைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சைசாறு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லிஇலைகள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருணைக்கிழங்கை உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்த எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் தோலை உரித்து நன்றாக மசித்து கொள்ள வேண்டும். மசித்த கருணைக்கிழங்குடன் எலுமிச்சை சாறு சேர்த்துநன்றாக கிளறி விட வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  • பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது பெருங்காயத்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
     
  • பின்பு வசித்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து நன்றாக கிளற வேண்டும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் சுருள வேக வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சூப்பரான கருணைக்கிழங்கு மசியல் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g

இதையும் படியுங்கள் : உடுப்பி கருணைகிழங்கு வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! பார்ததாலே நாவில் எச்சி ஊறும்!