சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான எண்ணெய் முருங்கைக்காய் குழம்பு, ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

முருங்கைக்காயில் நாம் விதவிதமான ரெசிபீஸ் செய்திருப்போம். பொதுவாக நாம் வீட்டில் வைக்கக் கூடிய சாம்பார் புளி குழம்பு அனைத்திற்கும் முருங்கைக்காய் சேர்த்தால் குழம்பு சற்று அதிகமாக ருசியாக இருக்கும். முருங்கை மரத்தில் இருந்தால் கிடைக்கக்கூடிய முருங்கைப்பூ முருங்கைக்கீரை முருங்கைக்காய் என அனைத்துமே அதிக சத்துக்கள் நிறைந்தது. சென்னை உடலுக்கு இரும்பு சத்து கொடுக்கக்கூடிய இந்த முருங்கைக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் உடலுக்கு ஆற்றலையும் தரக்கூடியது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இந்த ஒரு மரம் சம்பந்தமான பொருட்களையோ அல்லது முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு பல வகையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக்காயை நாம் சமையலில் பயன்படுத்தினால் சுவையும் அதிகரிக்கும். என்னதான் நாம் முருங்கைக்காயில் குழம்பு வைத்து சாப்பிட்டு இருந்தாலும் இன்று நாம் எண்ணெய் முருங்கைக்காய் செய்யப் போகிறோம் இதனை சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி தோசைக்கும் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

- Advertisement -

இந்த எண்ணெய் முருங்கைக்காயை மிகவும் எளிமையான முறையில் நாம் செய்து முடித்து விடலாம். இப்பொழுதும் ஒரே மாதிரியாக சைட் டிஷ் பொரியல் செய்யாமல் ஒரு முறை இந்த எண்ணெய் முருங்கைக்காயை செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் உங்களுக்கும் கூட மிகவும் பிடிக்கும். இப்பொழுது வாருங்கள் இந்த எண்ணெய் முருங்கைக்காய் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

எண்ணெய் முருங்கைக்காய் | Ennai Murungaikai In Tamil

பல வகையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக்காயைநாம் சமையலில் பயன்படுத்தினால் சுவையும் அதிகரிக்கும். எண்ணெய் முருங்கைக்காயை மிகவும் எளிமையான முறையில் நாம் செய்து முடித்து விடலாம். இப்பொழுதும் ஒரே மாதிரியாகசைட் டிஷ் பொரியல் செய்யாமல் ஒரு முறை இந்த எண்ணெய் முருங்கைக்காயை செய்து கொடுங்கள்உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் உங்களுக்கும் கூட மிகவும் பிடிக்கும்.இப்பொழுது வாருங்கள் இந்த எண்ணெய் முருங்கைக்காய் எளிமையான முறையில் எப்படி செய்யலாம்என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ennai Murungaikai
Yield: 4
Calories: 180kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 முருங்கைக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் முருங்கைக்காயை சுத்தம் செய்து உங்களுக்கு தேவையான அளவிற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாகஅரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும் பிறகுமுருங்கைக்காயை சேர்த்து கிளறவும்
  • பிறகு அதில் தேவையான அளவிற்கு உப்பு மிளகாய்த்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலையும் சோம்பையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • முருங்கைக்காய்ஒரு பத்து நிமிடங்கள் வெந்த பிறகு இந்த அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு எண்ணெய் முருங்கைக்காய் சுட சுட தயாராக இருக்கும்.
  • இதனை நீங்கள் சாதத்திற்கும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் அல்லது கலவை சாதத்திற்கும் சைட் டிஷ் ஆகவைத்துக் கொள்ளலாம். இட்லி தோசைக்குகூட இதனை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 180kcal | Carbohydrates: 4g | Protein: 10.9g | Fiber: 1.5g | Calcium: 65mg | Iron: 0.1mg