வித்தியாசமாக நாக்கிற்கு ருசியை தரக்கூடிய சிக்கனில் வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா. அந்த சமயத்தில் சிக்கன் வைத்து இப்படி ஒரு ஈரோடு சிக்கன் சிந்தாமணி ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது செய்வது மிக மிக சுலபம்தான். ஆனால் இதன் சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும். சாதாரணமாக ஒரு தயிர் சாதத்தோடு இதை வைத்து சாப்பிடும் போதும் அவ்வளவு நிறைவு கிடைக்கும்.
சிந்தாமணி சிக்கன் என்றாலே ஈரோடு ,கோயம்பத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நாம் பலரும் தயிர் சாதத்திற்கு சைடிஷாக எடுத்துக்கொள்வது ஊறுகாய், உருளைக்கிழங்கு பொரியல், அதிகமாக சிப்ஸ், ஆனால் ஈரோடு , கோவை மக்களோ தயிர் சாதத்திற்காகவே சிக்கன் சிந்தாமணி செய்வார்களாம். அந்த அளவிற்கு சாதம், கஞ்சி, தோசையென எல்லாவகையான உணவிற்கும் சிறந்த சைடிஷாக சிக்கன் சிந்தாமணி பொருந்துகிறது. அபாரமான ருசியில் சிக்கன் சிந்தாமணி இப்படி செய்து பாருங்க! வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஈரோடு சிக்கன் சிந்தாமணி | Erode Chicken Chindhamani Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 500 கிராம் சிக்கன்
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை சிறிது
- 1 கப் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 12 வரமிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- உப்பு சுவைக்கேற்ப
செய்முறை
- முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, 1/4 கப் நீரை ஊற்றி, வாணலியை மூடி 30 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
- சிக்கன் நன்கு வெந்ததும், அதில் தேங்காயைத் தூவி நன்கு கிளறி, ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், ஈரோடு சிக்கன் சிந்தாமணி தயார்.