பணம் வீண் செலவு ஆகாமல் சேமிக்க வேண்டுமா ? கையில் இந்த இரண்டு பொருட்கள் போதும்!

- Advertisement -

நாம் சம்பாதித்த பணத்திலிருந்து ஏன் நம்மால் சேமிக்க முடியவில்லை என்று நாம் வருமானத்தை கணக்கிட்டு பார்த்தால் அதில் ஒரு பெரும் தொகை வீண் செலவாக, வெட்டியாக செலவாகிக் கொண்டே இருந்திருக்கும். நாம் பணத்தை சேமிக்க நினைத்தாலும் இது போன்ற அனவசியமான சில செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் திடீரென்று மருத்துவ செலவு வரலாம், வீட்டில் ஏதேனும் ஒரு பகுதி சேதமாய் இருக்கலாம் இப்படி திடீரென்று வரும் வீண் செலவுகள் மற்றும் பணம் விரையம் ஆகுதலை குறைப்பதற்காக என்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொப்பில் ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

-விளம்பரம்-

பரிகாரம்

இப்படி நமக்கு ஏற்படும் வீண் செலவுகளை குறைப்பதற்காக நான் செய்யப் போகிற இந்த பரிகாரத்திற்கு மைசூர் பருப்பு மற்றும் படிகாரம் இந்த இரண்டு பொருட்கள் மட்டும் தான் தேவைப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொண்டு அதில் நாம் வைத்திருக்கும் படிகார கட்டியை வைத்து விடுங்கள். அதன் பின் நாம் வைத்திருக்கும் மைசூர் பருப்பையும் அதனுடன் சேர்த்து ஒரு முடிச்சாக முடிந்து வைத்துக் கொள்ளுங்கள் பின்பு இப்படி நாம் முடிந்திருக்கும் முடிச்சை நம் வீட்டில் எதற்கு அதிகமாகவும் செலவு செய்கிறோமா அந்தப் பொருளுக்கு சுற்றி போட வேண்டும்.

- Advertisement -

எதற்கெல்லாம் சுற்றி போடலாம்

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது உங்கள் வீட்டில் சில பகுதிகள் அடிக்கடி சேதம் ஆகி கொண்டு இருக்கலாம் அதனால் வீட்டுக்கு அடிக்கடி செலவழித்துக் கொண்டே இருப்பீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டின் நிலை வாசலுக்கு வெளியே நின்று வீட்டை சுற்றி மூன்று சுற்று போட்டு கொள்ளலாம். இல்லை உங்களுடைய வீட்டில் ஒருவர் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது அவருக்கு மருத்துவ செலவு அதிகமாக வருகிறது என்றால் அவரை கிழக்கு திசையை நோக்கி பார்த்த வர அமர வைத்து அவரை தலை சுற்றி மூன்று முறை சுற்றி பாடலாம் இப்படி உங்கள் வீட்டில் எந்த பொருட்கள் எல்லாம் அடிக்கடி வீண் செலவை ஏற்படுத்துகிறதோ அந்தப் பொருட்களுக்கு எல்லாம் மூன்று தடவை இது போல் சுற்றி போட வேண்டும்.

தனியாக தனியாக செய்ய வேண்டும்

ஆனால் எல்லா பொருள்களுக்கும் ஒரே ஒரு முடிச்சை மட்டும் வைத்து சுற்றி போடக்கூடாது. ஒரு பொருள்களுக்கு சுற்றி போடுகிறார்கள் என்றால் அதற்கு தனியாக ஒரு முடிச்சு தயார் செய்ய வேண்டும். உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு சுற்றி போட போகிறீர்கள் என்றால் அவர்களுக்கு ஒரு முடிச்சு தனியா தயார் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு முடிச்சு தயார் செய்து சுற்றி போடுங்கள் பின்பு இந்த சுற்றி வைத்த இந்த பொருட்களை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலைகளில் போட வேண்டும் இல்லை உங்கள் வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் துணியை எடுத்துவிட்டு பருப்பையும் படிகாரத்தையும் மட்டும் போட்டு விடலாம். அப்படியும் முடியாது என்பவர்கள் ஊருக்கு வெளியே மனிதனின் காலடிப்படாத இடங்களில் கொண்டு இந்த பொருட்களை போட்டு விடலாம்.

எப்போது செய்ய வேண்டும்

இப்படி இந்த பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும் என்று எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பது பற்றி பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்வது உகந்ததாக இருக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமையில் மாலை நேரங்களில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இதையெல்லாம் விட அமாவாசை தினங்களில் இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் பொருட்களுக்கு வீண் செலவு ஆவது அதற்காக பணத்தை விரையமாக்குவது போன்ற பிரச்சனைகள் குறைந்து விடும்.

-விளம்பரம்-

பண வரவு அதிகரிக்கும்

இப்படி நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் எந்த பொருளுக்கு சுற்றி போடுகிறீர்களோ அந்த பொருளின் மீது இருக்கும் கண் திருஷ்டி என அனைத்தும் நீங்கி அந்த பொருட்களால் உங்களுக்கு ஏற்படும் செலவு பண விரையமாவது போன்றவை படிப்படியாக குறைய தொடங்கும். உங்கள் கையிலும் பண வரவு அதிகரித்து உங்கள் வீட்டில் பணப் பழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதன் பின்பு வீட்டிலும் பணம் சேமிப்பாக தொடங்கும் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை உங்களுக்கே கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here