மீன் வறுவல், பொரியல், புட்டு, குழம்பு இந்த மாதிரி செய்து சாப்பிட்டு இருப்போம். அதே இந்த மீன்ல கபாப் செய்து சாப்பிட்டால் எவ்வளவு சுவையாக இருக்கும். அப்படி இந்த மீன்ல கபாப் செய்து சாப்பிடும் போது ரொம்ப டேஸ்ட்டா ருசியாவும் இருக்கும். குழந்தைகள் சுத்தமா மீன் சாப்பிட பிடிக்க மாட்டேங்குது அப்படி அவுங்களுக்காகவே மீன்ல இந்த மாதிரி கபாப் செய்து கொடுத்தீங்கன்னா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த சுவையான மீன் கபாப் கொடுக்கும் போது வீட்டில் இருக்கிற குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் ரொம்ப விருப்பத்தோடு சாப்பிடுவாங்க. இந்த சுவையான மீன் கபாப் ரொம்பவே சுலபமா வீட்ல இருக்கிற குறைந்த பொருளை வைத்து கம்மியான நேரத்துல நல்லா செய்து கொடுக்கலாம். நீங்க இந்த மாதிரி மீன்ல கபாப் செய்து கொடுக்கும்போது குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. மீன்ல வறுவல், குழம்பு, புட்டு இந்த மாதிரி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த கபாப்பை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுறதுனால அவங்களுக்கு இதோட சத்துக்கள் முழுவதுமாகவே கிடைச்சிடும். அதனால முள் இல்லாத மீன வாங்கி ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாத்தீங்கன்னா நிச்சயமா அது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். ஆகையினால் இந்த மாதிரி மீன்ல கபாப் செய்து கொடுக்கும்போது குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவதோட மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் இதே மாதிரி செய்து கொடுக்க சொல்லி கேட்பாங்க. இந்த மாதிரி சுவையான மீன் கபாப் எப்படி ருசியாக குழந்தைகளுக்கும் வீட்ல உள்ளவர்களுக்கும் பிடிச்ச மாதிரி செய்து கொடுக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மீன் கபாப் | Fish Kabab Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கிலோ முள் இல்லாத மீன்
- 1 வெங்காயம்
- 1/2 எலுமிச்சை பழம்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 ஸ்பூன் கடலை மாவு
- 2 ஸ்பூன் சோள மாவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- மீன்களைச் சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சுத்தம் செய்து கழுவி எடுத்துள்ள மீன்களை வேக வைத்துஎடுத்துக்கொள்ள வேண்டும்.
- வேகவைத்து எடுத்த மீன்களில் உள்ள சதைப் பகுதியை மட்டும்தனியாக பிரித்து முள் இல்லாமல் எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் மசித்த மீனைச் சேர்த்து அதனுடன் கடலை மாவு,சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து எடுத்துகொள்ள வேண்டும்.
- பின் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் ஆக கலந்து விட வேண்டும். இதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு நன்றாக கலந்து தட்டையாகத் தட்டிக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில்ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் தட்டி வைத்துள்ள மீன் கலவையைநமக்கு விருப்பம் போல் உருண்டை வடிவாகவோ அல்லது சதுர வடிவாகவோ அல்லது நீளமாகவோ உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்தால் சுவையான மீன் கபாப் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கனவாய் மீன் வறுவல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!