அசைவ உணவுகளில் அதிக அளவு கொழுப்பு இல்லாத உணவு மீன். மீன் உணவை விரும்பி உண்ணக்கூடியவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் . கடல் சார்ந்த உணவுகளில் மீனுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு . மீனில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏன் இதய நோயாளிகள் கூட உண்ணும் ஒரு உணவாக இருக்கிறது. மீனில் ஒமேகா 3 பேட்டி ஆசிட்ஸ் அதிகமாக இருப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் பக்கவாதம் மற்றும் இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது மீன் உண்பது மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது. அதனால் மீனை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது . கண் பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். கடல் சார்ந்த உணவுகளில் மீனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மீனில் இருக்கும் கால்சியம் விட்டமின்கள் உடலுக்கு அதிக வலுவை தருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணத்தக்க ஒரு உணவாக உலக அளவில் இருக்கிறது.
நாம் மீனை குழம்பு, வறுவல் அல்லது பொரித்து ருசித்திருப்போம். இப்பொழுது புட்டு கறியாக எப்படி செய்து ருசிக்கலாம் என்று பார்க்கலாம். சுவையான மீன் புட்டுக்கறி சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். இந்த மீன் புட்டுக்கறியை எந்த உணவும் இல்லாமல் தனியாக உண்டாலும் ருசி நன்றாக இருக்கும். இந்த சுவையான மீன் பொட்டுக்கறி செய்வதற்கு முள் இல்லாத மீன் வாங்கி வரவேண்டும். முள்ளுள்ள மீனாக இருந்தால் இந்த புட்டை சாப்பிடும் பொழுது தொண்டையிலோ அல்லது வாயிலோ முள் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு ஆகையினால் முள் இல்லாத மீனாக பார்த்து வாங்க வேண்டும்.
மீன் புட்டு கறி | Fish Puttu Curry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ முள்ளில்லாத மீன்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 5 பெரிய வெங்காயம்
- 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
- 2 டேபிள் ஸ்பூன் சீரகத் தூள்
- 3 பச்சை மிளகாய்
- 6 பூண்டு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கொத்து கொத்தமல்லித் தழை
- எண்ணெய்
செய்முறை
- முள்ளில்லாத மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வேக வைத்த பின் மீனை ஆற வைத்து முள்இன்றி உதிர்த்து வைக்கவும்.
- முள்ளில்லாத மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வேக வைத்த பின் மீனை ஆற வைத்து முள்இன்றி உதிர்த்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம் ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை சேர்த்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்.
- சிறிது நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
- மீன் சுருள வெந்து வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். ருசியான மீன் புட்டு கறி தயார்.