Advertisement
சைவம்

ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள்

Advertisement

மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடுதான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும். அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலா தான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவையை அதிகரிக்க பெரும்பாலான இந்திய சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலா தூளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இந்த மசாலா கலவையின் தனித்துவமான மற்றும் தனிப்பயன் செய்முறையைக் கொண்டுள்ளது. அ

ன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் கரம் மசாலாவானது உடலுக்கு நன்மை பயப்பதாய் உள்ளது. ஆனால் கரம் மசாலா நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது பலர் அறியாத ஒரு விஷயமாகும். செரிமானத்தை மேம்படுத்துவதில் கரம் மசாலா தூள் பல நன்மைகளை செய்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், அசிடிட்டி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. இந்த கரம் மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். வீட்டில் தயாரிக்கும் இந்த மசாலாவை நீண்ட நாட்கள் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம். அது எப்படி தயாரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

ஹோட்டல் ஸ்டைல் கரம் மசாலா தூள் | Garam Masala Powder Recipe In Tamil

Print Recipe
மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடுதான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும். அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலா தான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக
Advertisement
இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவையை அதிகரிக்க பெரும்பாலான இந்திய சமையல் குறிப்புகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலா தூளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் இந்த மசாலா கலவையின் தனித்துவமான மற்றும் தனிப்பயன் செய்முறையைக் கொண்டுள்ளது.
Course MASALA
Cuisine Indian
Keyword Garam Masala Powder
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 3 People
Calories 94

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/4 கி காய்ந்த மிளகாய்
  • 1/4 கி மல்லி
  • 50 கி சோம்பு
  • 50 கி சீரகம்
  • 25 கி மிளகு
  • 25 கி கசகசா
  • 25 கி வெந்தயம்
  • 10 கி பட்டை
  • 10 கி கிராம்பு
  • 10 கி அன்னாசி பூ
  • 10 கி மராத்தி மொக்கு
  • 10 கி ஜாதிபத்ரி

Instructions

  • முதலில் மசாலா பொருட்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வெறும் வாணலியில் சீரகத்தை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக மணம் வர வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் மிளகு, மல்லியை சேர்த்து குறைந்த தீயில் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிபத்ரி, அன்னாச்சி பூ, மராத்தி மொக்கு சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • பின் அடுப்பை அணைத்து விட்டு கசகசா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இவை அனைத்தையும் மறுபடியும் வெயிலில் காய வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான, மணமான கரம் மசாலா தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 94kcal | Carbohydrates: 4.9g | Protein: 15g | Fat: 2.5g | Sodium: 17mg | Potassium: 225mg | Fiber: 8g | Vitamin A: 8IU | Vitamin C: 32mg | Calcium: 13mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : ருசியான கேரளா ஸ்டைல் சாம்பார் செய்ய மணமணக்கும் கேரளா ஸ்டைல் சாம்பார் பொடி இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

9 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

15 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago