காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி இப்படி செய்து கொடுத்து பாருங்க! கூட ரெண்டு இட்லி , தோசை சேர்த்து சாப்பிடுவாங்க!

- Advertisement -

பொதுவாக எல்லார் வீட்டிலேயும் தினமும் இட்லி, தோசை செய்யும் போது அதுக்கு என்ன சட்னி செய்வது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும் இல்லையா நமக்கு நல்லா தெரிஞ்சதெல்லாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னி அவ்வளவுதான் ஆனால் அதுவே சாப்பிட்டு சாப்பிட்டு வீட்ல இருக்க எல்லாருக்கும் போர் அடிச்சு இருக்கும் அதனால கொஞ்சம் டிஃபரண்டா சட்னி செய்ய சொல்லி நம்மகிட்ட கேட்டுட்டே இருப்பாங்க அதுக்காக தான் இன்னைக்கு நம்ம ஒரு ஸ்பெஷலான சட்னி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம் அது என்ன சட்னி என்றால் பூண்டு மிளகாய் சட்னி.

-விளம்பரம்-

பூண்டு நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது இந்த பூண்டை வச்சு சட்னி செஞ்சு சாப்பிடும்போது சுவையும் மனம் ரொம்ப அருமையாக இருக்கும் நம்ம வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்பவும் பிடிச்சிடும் ஒரு இட்லி சாப்பிடுற இடத்துல ரெண்டு இட்லி ஒரு தோசை எக்ஸ்ட்ராவும் கூட சாப்பிடுவாங்க.

- Advertisement -

குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கொஞ்சம் கம்மியா குடுங்க ஏன்னா இதுல நம்ம மிளகாய் கொஞ்சம் அதிகமா சேர்க்க போறோம். இட்லி தோசை சப்பாத்தி பூரி தயிர் சாதம் மற்றும் வெறும் சாதத்துக்கும் போட்டு சாப்டா கூட இந்த சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும்.இப்போ வாங்க இந்த பூண்டு மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
1.50 from 2 votes

பூண்டு மிளகாய் சட்னி | Garlic Chilli chutney Recipe In Tamil

பூண்டுநம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது இந்த பூண்டை வச்சு சட்னி செஞ்சு சாப்பிடும்போது சுவையும் மனம் ரொம்ப அருமையாக இருக்கும் நம்ம வீட்ல இருக்க எல்லாருக்கும் ரொம்பவும் பிடிச்சிடும் ஒரு இட்லி சாப்பிடுற இடத்துல ரெண்டு இட்லி ஒரு தோசை எக்ஸ்ட்ராவும் கூட சாப்பிடுவாங்க.குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் கம்மியா குடுங்க ஏன்னா இதுல நம்ம மிளகாய் கொஞ்சம் அதிகமா சேர்க்க போறோம். இட்லி தோசை சப்பாத்தி பூரி தயிர் சாதம் மற்றும் வெறும் சாதத்துக்கும் போட்டு சாப்டா கூட இந்த சட்னி ரொம்ப சூப்பரா இருக்கும்.இப்போ வாங்க இந்த பூண்டு மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, chutney, dinner
Cuisine: tamil nadu
Keyword: Garlic Chilly Chutney
Yield: 4
Calories: 88kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 8 காய்ந்த மிளகாய்
  • 2 காஷ்மீரி மிளகாய்
  • 25 பற்கள் பூண்டு
  • 15 சின்ன வெங்காயம்
  • புளி சிறிதளவு
  • கல் உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • கருவேப்பிலை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் எடுத்து வைத்துள்ள மிளகாய்களை ஒரு கடாயில்  நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு 25 பூண்டு பற்களை சேர்த்த எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும் அதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கியவுடன் சிறிதளவு புளி மற்றும் கல் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இது அனைத்தும் நன்றாக ஆரிய பின்பு முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள மிளகாய்களை போட்டு அரைத்த பின்பு பூண்டு வெங்காயம் புளி, உப்பு அனைத்தையும் சேர்த்த சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையை தாளிப்புடன் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பூண்டு மிளகாய் சட்னி தயார்
  • இதனை நாம் இட்லி தோசை சப்பாத்தி மற்றும் வெறும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் வீட்டில் இதை செய்து பாருங்கள்

Nutrition

Serving: 500g | Calories: 88kcal | Carbohydrates: 1.9g | Protein: 0.9g | Potassium: 147mg | Calcium: 16mg