- Advertisement -
தினமும் வீட்டில் காலை உணவாக இட்லி தோசை என்பது தான் அதிகமாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்று யோசிப்பதிலையே பாதி நேரம் கழிந்து விடும். தினமும் ஏதேனும் ஒரு சட்னியை செய்து வைத்தாலும் அது அலுப்பாக தான் இருக்கும். இதற்காக சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பூண்டு பொடியை ஒரு முறை அரைத்து வைத்துக்கொண்டால் போதும் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இதிலிருந்து கொஞ்சம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுவையான பூண்டு பொடியை எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
-விளம்பரம்-
பூண்டு பொடி | Garlic Podi Recipe In Tamil
தினமும் வீட்டில் காலை உணவாக இட்லி தோசை என்பது தான் அதிகமாக இருக்கும். அவ்வாறு இவற்றிற்கு ஏற்றார் போல் சைடிஸ் செய்வது என்பது தினமும் ஒரு டாஸ்க் போன்று தான் இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள என்ன செய்வது என்று யோசிப்பதிலையே பாதி நேரம் கழிந்து விடும். தினமும் ஏதேனும் ஒரு சட்னியை செய்து வைத்தாலும் அது அலுப்பாக தான் இருக்கும். இதற்காக சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பூண்டு பொடியை ஒரு முறை அரைத்து வைத்துக் கொண்டால் போதும் தேவைப்படும் நேரத்தில் எல்லாம் இதிலிருந்து கொஞ்சம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது இட்லி, தோசை, உத்தப்பம் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.இந்த சுவையான பூண்டு பொடியை எவ்வாறு செய்யலாம் என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Yield: 4
Calories: 331kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 12 தோல் உரித்த பூண்டு
- 10 சிறிய துண்டுகள் கொப்பரை தேங்காய்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- 2 தேக்கரண்டி வெள்ளை எள்ளு
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
- ஒரு கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும் அது நன்கு நிறம் மாறிய உடன் ஒரு தட்டில் வைத்து கொள்ளவும் .
- அதே கடாயில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கொப்பரை தேங்காய் அல்லது துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
- அதையும் அந்த தட்டில் கொட்டி கொள்ளவும் அதே கடாயில் வெள்ளை எள்ளு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும் மூன்று பொருள்களையும் நன்கு ஆற விடவும்.
- ஒருஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் அந்த பொருள்களை சேர்த்து நன்கு கொர கொர வென்று அரைக்கவும் அரைத்த பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும் அதனுடன் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும் இப்பொழுது சுவையான பூண்டு பொடி தயார்.
Nutrition
Serving: 100g | Calories: 331kcal | Carbohydrates: 73g | Protein: 17g | Fat: 0.5g | Fiber: 9g | Vitamin C: 1mg | Calcium: 80mg | Iron: 5.6mg
- Advertisement -