சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட ருசியான இஞ்சி கார குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள்!
நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இஞ்சி சுவையும், மணமும் மட்டும் தராமல் ஏராளமான மருத்துவ குணங்களையும் தருகிறது. நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இஞ்சியை பொதுவாக சமையல
நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம். இஞ்சி சுவையும், மணமும் மட்டும் தராமல் ஏராளமான மருத்துவ குணங்களையும் தருகிறது. நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இஞ்சியை பொதுவாக சமையலில் அளவாக சேர்ப்போம். ஆனால் அந்த இஞ்சியைக் கொண்டு குழம்பு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த இஞ்சி கார குழம்பு சுவையாக இருப்பதோடு, உடலுக்கும் ஆரோக்கியமானது. குறிப்பாக செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இஞ்சி குழம்பு சாப்பிடுவது நல்லது. உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், அவ்வப்போது இஞ்சி கார குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும் இஞ்சி செயல்படுகிறது. இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. இஞ்சி உணவில் சேர்த்து கொள்ள விரும்பாதவர்கள் குழம்பு பிடிக்காதவர்கள் இஞ்சி துவையலாக செய்து சாப்பிடலாம். இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள இஞ்சியில் எப்படி சுவைமிகுந்த கார குழம்பு செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான இஞ்சி ரசம் இப்படி செய்து! பாருங்கள்! மணமணக்கும் இஞ்சி ரசத்தின் வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்!