வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள் என்றால் குழந்தை பெற்றவர்களுக்கு ஆட்டுத்தலைக்கறி குழம்பு வைத்து சாப்பிட கொடுப்பார்கள். இவ்வாறு குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக் கொடுத்தால் அவர்களின் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது ஆட்டின் தலை கறியில் குழம்பு வைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த தலைக்கறி குழம்பை எவ்வாறு பாட்டி கைப்பக்குவத்தில் சுவையாக செய்யலாம் என்பதைப் பற்றி தான் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன் என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால் என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டு தலைக்கறி பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு தலைக்கறி குழம்பு செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.
ஆட்டுத்தலைக்கறி குழம்பு | Goat Head Gravy Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- ஆட்டுதலை சுத்தம் செய்த
- 1 மல்லி விதை வெட்டியது
- 2 தேக்கரண்டி தேங்காய்
- 1 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 தேக்கரண்டி உப்பு
- 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
- 2 தேக்கரண்டி சீரகம்
செய்முறை
- முதலில் ஆட்டின் தலையை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் மல்லி விதை, தக்காளி, தேங்காய், வெங்காயம், சீரகத்தை நன்கு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்த சீரகம், மல்லியை போட்டு வதக்கவும்.
- பின்பு நறுக்கிய தலைக்கறியை போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி, அதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கவும்
- சுவையான தலைக்கறி குழம்பு ரெடி.