மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். மீன் குழம்பு மேல விருப்பப்படாத ஆட்களே இருக்க மாட்டாங்க அப்படின்னு தான் சொல்லணும். அப்படி மீன் குழம்பு அப்படினா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ? எப்போதும் செய்கிற அந்த மீன் குழம்பு மாதிரி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா வேற வேற ஊர்கள் உள்ள ஸ்டைல்ல இந்த மீன் குழம்பு செஞ்சு சாப்பிடும் போது அது ரொம்பவே ருசியா இருக்கும். விதவிதமான மீன் குழம்புகளை ட்ரை பண்ணும்போது நம்ம நாக்குக்கு அப்படி ஒரு டேஸ்ட் கிடைக்கும். அதுதான் நம்ம இப்ப பண்ண போறோம் நம்ம எப்போதுமே வீட்ல ஒரு மாதிரி பண்ணுவாங்க மீன் குழம்பு அந்த ஸ்டைல் இல்லாமல் வேற மாதிரி கொஞ்சம் மசாலாக்கள் மாத்தி அரைச்சு சேர்த்து ஒரு சூப்பரான மீன் குழம்பு செய்யலாம். அதுவும் கோதாவரி ஸ்டைல்ல இந்த மீன் குழம்பு செய்து சாப்பிடும்போது அப்படியே சாதத்தோடு அந்த மீன் குழம்பு கலந்து சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்டா இருக்கும்.
இந்த சுவையான ரொம்பவே ருசியான மீன் குழம்பு எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். வீட்டில் இருக்கிற எல்லாருமே இந்த மீன் குழம்பு அப்படி ருசித்து சாப்பிடுவாங்க. நீங்க எந்த மீன் வாங்குனாலும் சரி இந்த ஸ்டைல்ல மீன் குழம்பு வச்சு கொடுத்தீங்கன்னா மீனே பிடிக்காதவங்க கூட இந்த மீன் குழம்புக்கு அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும். இந்த மீன் குழம்பு சுவைக்கு உங்க வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க. இந்த கோதாவரி ஸ்டைல் மீன் குழம்பு மசாலாவை நீங்க அரைச்சு செய்யும் போது சும்மா அவ்ளோ ருசியா இருக்கும். இந்த மீன் குழம்பு செய்ய ரொம்பவே டைம் எடுக்குமா அப்படினா இல்லை கொஞ்சமா மசாலா பொருட்கள் தான் ரொம்பவே ஈஸியா எப்பவும் யூஸ் பண்ற மசாலா பொருட்களை கொஞ்சமா மாத்தி வேற ஸ்டைலில் சேர்க்கப்படும் அதனால இந்த குழம்பு ரொம்பவே பிடிக்கும்.
எல்லாருக்குமே மீன் குழம்பு இந்த சுவையான கோதாவரி ஸ்டைலில் மீன் குழம்பு யாருமே வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க. நீங்க வைக்க வைக்க சாப்டே இருப்பாங்க. உங்களுக்கு கூட இல்லாம இந்த மீன் குழம்பு காலி ஆயிடுனா பாத்துக்கோங்க. அதுவும் மீன் குழம்பு ரொம்ப பிடிச்சவங்களா இருந்தாங்கன்னா நிச்சயமா இந்த மீன் குழம்பு யாருக்குமே கிடைக்காது அவங்க மட்டுமே தான் சாப்பிடுவாங்க.இப்படி சுவையான இந்த மீன் குழம்பு மட்டும் நாம செய்திட்டோம்னு வச்சுக்கோங்களேன் நீங்க எப்போது செய்ற மீன் குழம்பு விட இந்த மீன் குழம்பு தான் நல்லா இருக்கு இதையே நீங்க திரும்பி செஞ்சு கொடுங்க அப்படின்னு கேக்குற அளவுக்கு இருக்கும் இந்த மீன் குழம்போட ருசி. சரி வாங்க இந்த சுவையான கோதாவரி மீன் குழம்பு எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
கோதாவரி மீன் குழம்பு | Godavari Fish Kulambu Recipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மீன்
- எலுமிச்சை அளவு புளி
- 2 வெங்காயம்
- 1 ஸ்பூன் தனியா விதைகள்
- 1 ஸ்பூன் சீரகம்
- 10 பல் பூண்டு
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கொத்து கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
- முதலில் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு புளியை ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தனியா விதைகள், சீரகம், பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மீனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் வைத்து விட வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- பிறகு அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள வெங்காய மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட்ட வேண்டும். அதனோடு குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பல விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு எண்ணெய் பிரிந்து வரும் அப்பொழுது அதில் மீன்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- குழம்பு நன்றாக கொதித்து வந்த பிறகு அதில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறினால் சுவையான கோதாவரி மீன் குழம்பு தயார்.