பரோட்டா இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான இரவு உணவு அல்லது டின்னர். பரோட்டா தென்னிந்தியாவில் குருமா, சால்னா மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. சால்னா, குருமா தவிர பரோட்டாவை காய்கறி குருமா, சென்னா மசாலா உடனும் உண்ணலாம். ஆலூ பரோட்டா, கொத்துப் பரோட்டா, மெலிதான வீச்சுப் பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிய மலபார் பரோட்டா, சிலோன் பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டைப் பரோட்டா, காலிஃப்ளவர் பரோட்டா என்று பல விதமான பரோட்டா வகைகள் உள்ளன. அதில் இன்று நாம் பார்க்க உள்ளது பச்சைமிளகாய் பரோட்டா. பரோட்டா என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். இருப்பினும் அதில் சத்தானதாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வோம்.
பிள்ளைகள் விதவிதமான உணவு கேட்டு அடம்பிடிப்பது வழக்கம் தான். எனவே, அவர்களுக்கு ஆரோக்கியமான பலவித ஊட்டச்சத்து நிறைந்த உணவினை நாம் தர வேண்டியது அவசியம். எந்த மாதிரியான ஆரோக்கியமான உணவை நாம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். அந்த வகையில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பச்சை மிளகாய் பரோட்டா செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த விதவிதமான உணவை செய்து கொடுத்து அசத்துவதோடு, அவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாமே. பச்சை மிளகாய் சேர்ப்பதனால் இது காரமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். பச்சை மிளகாயுடன் வேறு சில பொருட்களும் நாம் சேர்ப்பதனால் இதில் காரம் கம்மியாக தான் இருக்கும்.
பச்சைமிளகாய் பரோட்டா | Green Chilli Parotta Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் மைதா மாவு
- 6 பச்சை மிளகாய்
- 1 கப் புதினா, கொத்தமல்லி
- 5 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் நிலக்கடலை
- 1 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
- 5 முந்திரி
- 1/2 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மைதா மாவை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு, சீரகம், ஆம்சூர் பவுடர், உப்பு, நிலக்கடலை, முந்திரி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அதனுடன் சில்லி பிளெக்ஸ் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- சப்பாத்தி மாவை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி பின் மெல்லிசாக விரித்து அதனுள் பச்சைமிளகாய் விழுதை வைத்து ரோல் செய்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து பரோட்டாவாக இட்டு வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் வித்தியாசமான பச்சைமிளகாய் பரோட்டா தயார். இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு உணவுக்கு காரசாரமான ருசியில் கைமா பரோட்டா இப்படி செய்து பாருங்க!