நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் பச்சைமிளகாய் சாம்பார். சாம்பார் எப்போதுமே காரசாரமா இருக்காது கொஞ்சம் காரம் கம்மியா தான் நம்ம செய்வோம். அப்படி என்று சிலருக்கு சாமான்ல மிளகாய்த்தூள் போடாம வெறும் பச்சை மிளகாய் சேர்த்து சூப்பரான ஒரு சாம்பார் வைப்பாங்க.
இந்த சாம்பார அதிகமா பரங்கிகாயோட சேர்த்து வைக்கும் போது ரொம்பவே நல்லா இருக்கும். இந்த பச்சை மிளகாய் சாம்பார் சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும். இந்த சுவையான ரொம்பவே டேஸ்டியான சாம்பார் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த சாம்பார்ல காரம் அப்படிங்கறது அறவே இருக்காது. வெறும் மஞ்சள் தூள் சேர்த்து மஞ்சள் கலர் மட்டும்தான் இருக்கும்.
இந்த சுவையான பச்சை மிளகாய் சாம்பார் சின்ன குழந்தைங்க பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். காரணம் இந்த சாம்பார்ல காரம் அப்படிங்கறது வெறும் பச்சை மிளகாய் மட்டுமே தான் போட போறோம். முழுசா ஒரு சாம்பார்ல நிறைய காய்கறிகள் மட்டும் நம்ப ஏன் அதிகமாக மட்டும் சொல்லி பேசலாம் ஏன்னா அந்த பொருளை மட்டுமே வைத்து நம்மளால ரொம்ப டேஸ்டா அந்த சமையல செஞ்சு முடிக்க முடியும் அப்படின்னு தான் சுவையான பச்சை மிளகாய் சாம்பார் எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்
பச்சைமிளகாய் சாம்பார் | Green Chilli Sambar In Tamil
Equipment
- 1 அகல பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் துவரம் பருப்பு
- 2 பரங்கிக்காய்
- 1 முள்ளங்கி
- 5 பச்சைமிளகாய்
- 1 தக்காளி
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 10 சின்ன வெங்காயம்
- 1/2 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் முள்ளங்கி,பரங்கிகாய் தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
- பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் முள்ளங்கி, பரங்கிக்காய், கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
- காய் வெந்தபிறகு தேங்காயை சேர்த்து கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
- சாம்பார் கொத்தித்த உடன் இறக்கி சாதத்தோடு சூடாக பரிமாறினால் சுவையான பச்சைமிளகாய் சாம்பார் தயார்.