ருசியான பச்சை மிளகாய் தக்காளி தொக்கு இப்பட செய்து பாருங்க! சாதத்துடன் பிரட்டி சாப்பிட பக்காவாக இருக்கும்!
உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி பச்சை
உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
பொதுவாக வட இந்தியாவில் சப்பாத்தியை டால், உருளைக்கிழங்கு, மட்டர் பன்னீர், பாலக் பன்னீர், மற்றும் கடாய் மஷ்ரூம் போன்ற சைடிஷ்களை வைத்து தான் உண்பார்கள். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. சப்பாத்திக்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்து விட்டாலும் அதற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு.
இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது, தக்காளியில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பெரும்பாலான வீடுகளில் பொதுவாக தக்காளி தொக்கிற்கு காய்ந்த மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தூள் தான் சேர்ப்பார்கள். தக்காளி தொக்கில் மிளகாய்த்தூளுக்கு பதில் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள். சுவையும்,வாசனையும் தூக்கலாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி தொக்கு இப்படி ஒரு முறை செஞ்சு வச்சுக்கோங்க! சுட சுட சாதத்துக்கும், இட்லி தோசைக்கு செம காம்பினேஷன்!