Home சைவம் ருசியான பச்சை மிளகாய் தக்காளி தொக்கு இப்பட செய்து பாருங்க! சாதத்துடன் பிரட்டி சாப்பிட பக்காவாக...

ருசியான பச்சை மிளகாய் தக்காளி தொக்கு இப்பட செய்து பாருங்க! சாதத்துடன் பிரட்டி சாப்பிட பக்காவாக இருக்கும்!

உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

-விளம்பரம்-

பொதுவாக வட இந்தியாவில் சப்பாத்தியை டால், உருளைக்கிழங்கு, மட்டர் பன்னீர், பாலக் பன்னீர், மற்றும் கடாய் மஷ்ரூம் போன்ற சைடிஷ்களை வைத்து தான் உண்பார்கள். ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள். ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. சப்பாத்திக்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்து விட்டாலும் அதற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு.

இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது, தக்காளியில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பெரும்பாலான வீடுகளில் பொதுவாக தக்காளி தொக்கிற்கு காய்ந்த மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தூள் தான் சேர்ப்பார்கள். தக்காளி தொக்கில் மிளகாய்த்தூளுக்கு பதில் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள். சுவையும்,வாசனையும் தூக்கலாக இருக்கும்.

Print
5 from 3 votes

பச்சை மிளகாய் தக்காளி தொக்கு | green chilli tomato thokku recipe in tamil

உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி பச்சை மிளகாய் தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சப்பாத்திக்கு மட்டுமல்ல இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டாலும் அதற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் தக்காளி பச்சை மிளகாய் தொக்கு. இதை பக்குவமாக செய்தால் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. பெரும்பாலான வீடுகளில் பொதுவாக தக்காளி தொக்கிற்கு காய்ந்த மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தூள் தான் சேர்ப்பார்கள். தக்காளி தொக்கில் மிளகாய்த்தூளுக்கு பதில் காரத்துக்கு பச்சை மிளகாய் சேர்த்து செய்து பாருங்கள். சுவையும்,வாசனையும் தூக்கலாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: green chilli tomato thokku
Yield: 4 People
Calories: 68kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 10 தக்காளி
  • 5 பெரிய வெங்காயம்
  • 15 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு கழுவி நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சு இலை, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின்னர் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • இவை நன்கு வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வதக்கி மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
  • தக்காளியில் தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் இப்போது மிகவும் சுவையான பச்சை மிளகாய் சேர்த்த தக்காளி தொக்கு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 68kcal | Carbohydrates: 2.9g | Protein: 7.9g | Fat: 0.2g | Sodium: 6mg | Potassium: 237mg | Fiber: 2.6g | Sugar: 1.2g | Vitamin A: 83IU | Vitamin C: 12.7mg | Calcium: 11mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி தொக்கு இப்படி ஒரு முறை செஞ்சு வச்சுக்கோங்க! சுட சுட சாதத்துக்கும், இட்லி தோசைக்கு செம காம்பினேஷன்!