வீட்டில் பச்சைபயிறு இருந்தால் போதும் இப்படி ஒரு முறை வறுவல் செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

தினமும் பக்க உணவாக காய்கறியில் செய்யும் கூட்டு, பொரியல்  என்று செய்து சாப்பிட்டு போர் அடிக்குதா, ரசம், புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு வறுவல் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும்.பொதுவாகவே பெரும்பாலும்  பச்சை பயிறு தோசை, குழம்பு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

 உடலுக்கு மிகவும் அதிகமான ஆரோக்கியம் கொடுக்கும் பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு வகையை பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகின்றோம். பச்சைப் பயிரை வேக வைத்து வறுவல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டோம் என்றால் மிகவும் அற்புதமாக இருக்கும். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பச்சைப் பருப்பு வறுவலை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
3 from 1 vote

பச்சைப்பயறு வறுவல் | Green Gram Fry Recipe In Tamil

உடலுக்கு மிகவும் அதிகமான ஆரோக்கியம் கொடுக்கும்பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு வகையை பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகின்றோம்.பச்சைப் பயிரை வேக வைத்து வறுவல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டோம் என்றால்மிகவும் அற்புதமாக இருக்கும். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள்இந்த பச்சைப் பருப்பு வறுவலை எவ்வாறு சமைக்க வேண்டும். பச்சை பயிரை வைத்து ஒரு வறுவல்சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, Snack
Cuisine: tamil nadu
Keyword: Green gram Fry
Yield: 4
Calories: 347kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சைப்பயறு
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் தேங்காய்த் துருவல்
  • 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன்  இஞ்சி
  • கொத்தமல்லித் தழை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • பச்சைப்பயறை 7 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • பிறகு,தேங்காய்த் துருவலையும். சேர்த்து அரைக்கவும்.
  • இத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை. கொத்தமல்லித்தழையைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • மாவை இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும்.
  • வெந்த துண்டுகளை எடுத்து ஆறவைத்து சதுரத் துண்டுகளாக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பச்சைப்பயறு வறுவல் ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 347kcal | Carbohydrates: 63g | Protein: 24g | Fat: 1.2g | Fiber: 16g | Calcium: 132mg | Iron: 6.7mg