மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான பச்சை பயறு பணியாரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. பச்சைப்பயிறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானிய வகையாகும். முழு பச்சை பயறை ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புர
பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. பச்சைப்பயிறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானிய வகையாகும். முழு பச்சை பயறை ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் உளுந்து சேர்த்து செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வெகுவாக குறையும். இவை எல்லாம்உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காதவையே என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடாக்குடிய உணவுகளில் குழிப்பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்துக்கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது.
இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக அதே நேரம் ஆரோக்கியமான முறையில் செய்து விடலாம். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த பச்சை பயிறு குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க. இனி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள் சீக்கிரம் காலியாகிவிடும். ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயிறு பணியாரத்தை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பச்சைபயிறு இருந்தால் போதும் இப்படி ஒரு முறை வறுவல் செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!