மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான பச்சை பயறு பணியாரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. பச்சைப்பயிறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானிய வகையாகும். முழு பச்சை பயறை ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் உளுந்து சேர்த்து செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வெகுவாக குறையும். இவை எல்லாம்உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காதவையே என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடாக்குடிய உணவுகளில் குழிப்பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்துக்கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது.

-விளம்பரம்-

இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக அதே நேரம் ஆரோக்கியமான முறையில் செய்து விடலாம். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த பச்சை பயிறு குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க. இனி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள் சீக்கிரம் காலியாகிவிடும். ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயிறு பணியாரத்தை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

பச்சை பயறு பணியாரம் | Green Gram Paniyaram Recipe In Tamil

பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது. பச்சைப்பயிறு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய ஒரு தானிய வகையாகும். முழு பச்சை பயறை ஊற வைத்து அரைத்து செய்யக் கூடிய இந்த பணியாரம் புரத சத்துக்களையும், நார் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கக் கூடியது. இதில் உளுந்து சேர்த்து செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வெகுவாக குறையும். இவை எல்லாம்உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்காதவையே என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த பச்சை பயறு பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த பச்சை பயிறு குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Green Gram Paniyaram
Yield: 4 People
Calories: 212kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குழி பணியார கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை பயிறு
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு

செய்முறை

  • முதலில் பச்சை பயறை தேவையான அளவு எடுத்து நன்கு கழுவி சிறிதளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் மிக்ஸி ஜாரில் பச்சை பயறை சேர்த்து அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • நாம் அரைத்த விழுதை ஒரு பௌலில் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தாளிப்பு சேர்த்து கலந்து விடவும்.
  • அதன்பின் ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு பணியாரம் தயார். இதற்கு தக்காளி கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 212kcal | Carbohydrates: 38.8g | Protein: 14.2g | Fat: 1.8g | Sodium: 8mg | Potassium: 124mg | Fiber: 15.4g | Sugar: 2g | Vitamin C: 13.2mg | Calcium: 8mg | Iron: 2.9mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் பச்சைபயிறு இருந்தால் போதும் இப்படி ஒரு முறை வறுவல் செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!