Advertisement
சைவம்

ருசியான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். அந்த வவையில் இன்று நாம் சுவையான பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. நமது வீட்டில் காலிபிளவரை வறுவல், 65 போன்று செய்து கொடுத்திருப்பார்கள். ஆனால் அதையே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போய்விடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். தற்போது நிறைய பேர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பதால், பெரும்பாலும் சப்பாத்தியை தான் இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள். அப்படி சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக ஸ்பெஷலாக ஏதேனும் செய்து சாப்பிட நினைத்தால் இந்த பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவலை செய்யுங்கள். இந்த பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருப்பதுடன், வாய்க்கு விருந்து அளிக்குமாறு மிகவும் சுவையாகவும் இருக்கும். இது சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

Advertisement

பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் | Green Peas Cauliflower Fry Recipe In Tamil

Print Recipe
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய
Advertisement
நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். அந்த வவையில் இன்று நாம் சுவையான பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Course dinner, LUNCH
Cuisine Indian
Keyword Green Peas Cauliflower Fry
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 72

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கி காலிஃப்ளவர்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் காலிஃபிளவரை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கறிவேப்பில்லை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பட்டாணி வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 72kcal | Carbohydrates: 5.3g | Protein: 7g | Fat: 3g | Sodium: 32mg | Potassium: 303mg | Fiber: 2.1g | Vitamin A: 16IU | Vitamin C: 46.4mg | Calcium: 22mg | Iron: 5mg

இதனையும் படியுங்கள் : ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

8 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

16 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

23 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago