ருசியான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். அந்த வவையில் இன்று நாம் சுவையான பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

-விளம்பரம்-

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. நமது வீட்டில் காலிபிளவரை வறுவல், 65 போன்று செய்து கொடுத்திருப்பார்கள். ஆனால் அதையே செய்து கொடுத்தால் நமக்கு போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போய்விடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். தற்போது நிறைய பேர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பதால், பெரும்பாலும் சப்பாத்தியை தான் இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள். அப்படி சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக ஸ்பெஷலாக ஏதேனும் செய்து சாப்பிட நினைத்தால் இந்த பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவலை செய்யுங்கள். இந்த பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாக இருப்பதுடன், வாய்க்கு விருந்து அளிக்குமாறு மிகவும் சுவையாகவும் இருக்கும். இது சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

- Advertisement -
Print
5 from 1 vote

பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் | Green Peas Cauliflower Fry Recipe In Tamil

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது. இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். அந்த வவையில் இன்று நாம் சுவையான பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Green Peas Cauliflower Fry
Yield: 4 People
Calories: 72kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 கி காலிஃப்ளவர்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் காலிஃபிளவரை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் கறிவேப்பில்லை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பட்டாணி வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி காலிஃபிளவர் வறுவல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 72kcal | Carbohydrates: 5.3g | Protein: 7g | Fat: 3g | Sodium: 32mg | Potassium: 303mg | Fiber: 2.1g | Vitamin A: 16IU | Vitamin C: 46.4mg | Calcium: 22mg | Iron: 5mg

இதனையும் படியுங்கள் : ருசியான பஞ்சாபி பன்னீர் பச்சை பட்டாணி கிரேவி இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!