Advertisement
சைவம்

ருசியான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. அடர்த்தியான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்று. பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த பட்டாணியை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு பட்டாணியை வேக வைத்து சுண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த இந்த பட்டாணியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், கே, சி, ஃபோலேட், புரதம் போன்றவை நிறைந்துள்ளது. பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. செரிமானம் சீராக இருக்கவும் நச்சுப் பொருள்கள் அகற்றவும் செய்கிறது. இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளன இந்த பச்சை பட்டாணியில் சுவையான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இந்த பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இந்த பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பச்சை பட்டாணி கொண்டு வதக்கியோ அல்லது பொரியல், மசாலா கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்து போயிருந்தால், அந்த பட்டாணியைக் கொண்டு சுவையான தேங்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

Advertisement

பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு | Green Peas Coconut Koottu Recipe In Tamil

Print Recipe
மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. அடர்த்தியான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்று. இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், கே, சி, ஃபோலேட், புரதம் போன்றவை நிறைந்துள்ளது. பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளன இந்த
Advertisement
பச்சை பட்டாணியில் சுவையான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இந்த பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Green Peas Coconut Koottu
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 62

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 250 கி பச்சை பட்டாணி
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 வர ‌மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 வர ‌மிளகாய்
  • 5 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்தம் பருப்பு

Instructions

  • முதலில் பச்சை பட்டாணியை உரித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, முந்திரிபருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 62kcal | Carbohydrates: 11g | Protein: 4.1g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 244mg | Fiber: 3.6g | Vitamin A: 40IU | Vitamin C: 76mg | Calcium: 25mg | Iron: 17mg

இதனையும் படியுங்கள் : ருசியான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

3 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

15 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

15 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

16 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

16 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

18 மணி நேரங்கள் ago