- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. அடர்த்தியான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்று. பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த பட்டாணியை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு பட்டாணியை வேக வைத்து சுண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த இந்த பட்டாணியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், கே, சி, ஃபோலேட், புரதம் போன்றவை நிறைந்துள்ளது. பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. செரிமானம் சீராக இருக்கவும் நச்சுப் பொருள்கள் அகற்றவும் செய்கிறது. இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ளன இந்த பச்சை பட்டாணியில் சுவையான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இந்த பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இந்த பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பச்சை பட்டாணி கொண்டு வதக்கியோ அல்லது பொரியல், மசாலா கூட்டு செய்தோ சாப்பிட்டு அலுத்து போயிருந்தால், அந்த பட்டாணியைக் கொண்டு சுவையான தேங்காய் கூட்டு செய்து சுவையுங்கள். இது நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் பச்சை பட்டாணியை உரித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, முந்திரிபருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு தயார்.






