Advertisement
சைவம்

ருசியான பச்சை மிளகு குழம்பு‌ ஒரு தரம் வீடே மணக்க மணக்க செய்து கொடுத்து பாருங்க!

Advertisement

தினமும் என்ன சமையல் செய்வது என்று தெரியாமல் புலம்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் நல்ல சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை மிளகு குழம்பு செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகு குழம்பு பல வகைகளில் செய்யலாம். பூண்டு சேர்த்தது, சின்ன வெங்காயத்தில் தாளித்தது, மிளகு அரைத்தது என பலவகைகளில் செய்யலாம். செட்டிநாடு மிளகு குழம்பு ருசிக்கும் ஐயர் வீட்டு மிளகு குழம்பு ருசிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இன்று இந்த பதிவில் ஈஸியாக எல்லோர் வீடுகளிலும் பொதுவாக செய்யக்கூடிய பச்சை மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். வீட்டில் காய்கறி இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை, அரைத்து, பச்சை மிளகு சேர்த்து மிகவும் குறைந்த நேரத்தில் காரசாரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.

இந்த குழம்பு இரைப்பை குடல் வலி, குடல் வாயு மற்றும் பிற வயிற்று தொடர்பான ஜீரண பிரச்சனைகளை சீர் செய்யும். மேலும் இந்த பச்சை மிளகில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்சிடென்ட், கிருமி எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது. அதனால் சளி, காய்ச்சலை விரட்டும் தன்மை உள்ளது. அதேபோல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். பனிக்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு இருக்கும். இந்த நேரத்தில் இந்த பச்சை மிளகு குழம்பு செய்து சாப்பிட்டால் அனைத்தும் சரியாகும். குழந்தைகள் எந்த உணவில் மிளகை சேர்த்தாலும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி குழம்பு வைத்து கொடுத்தால் வேணாம் என்றே சொல்ல மாட்டார்கள். இந்த குழம்பை வைத்து விட்டு சுடச்சுட சோறு வடித்து விட்டால் போதும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல்! அவ்வளவு தான், எல்லா சாப்பாடும் வயிற்றுக்குள் எப்படி போனது என்பதே தெரியாமல் போய்விடும். இந்த ‌குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

Advertisement

பச்சை மிளகு குழம்பு‌ | Green Pepper Kulambu Recipe In Tamil

Print Recipe
தினமும் என்ன சமையல் செய்வது என்று தெரியாமல் புலம்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் நல்ல சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை மிளகு குழம்பு செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகு குழம்பு பல வகைகளில் செய்யலாம். பூண்டு சேர்த்தது, சின்ன வெங்காயத்தில் தாளித்தது, மிளகு அரைத்தது என பலவகைகளில்
Advertisement
செய்யலாம். செட்டிநாடு மிளகு குழம்பு ருசிக்கும் ஐயர் வீட்டு மிளகு குழம்பு ருசிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இன்று இந்த பதிவில் ஈஸியாக எல்லோர் வீடுகளிலும் பொதுவாக செய்யக்கூடிய பச்சை மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். வீட்டில் காய்கறி இல்லாவிட்டாலும், வீட்டில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை, அரைத்து, பச்சை மிளகு சேர்த்து மிகவும் குறைந்த நேரத்தில் காரசாரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Green Pepper Kulambu
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 57

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

Ingredients

  • 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1/4 கப் புளி கரைசல்
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில் பச்சை மிளகு தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.‌ பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் சீரகம், சோம்பு, கசகசா, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு பச்சை மிளகு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பின் புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விடவும்.
  • அவ்வளவுதான் மிகவும் ருசியான பச்சை மிளகு குழம்பு தயார். இந்த குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.

Nutrition

Serving: 400g | Calories: 57kcal | Carbohydrates: 4.4g | Protein: 8.7g | Fat: 0.2g | Sodium: 2.4mg | Potassium: 27mg | Fiber: 1.8g | Vitamin A: 2IU | Vitamin C: 23mg | Calcium: 6mg | Iron: 22mg

இதனையும் ‌படியுங்கள் : மணக்க மணக்க சூப்பரான மிளகு சாதம் இப்படி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

2 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

20 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

24 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago