மணக்க மணக்க சூப்பரான மிளகு சாதம் இப்படி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்!!!

- Advertisement -

மிளகு பயன்படுத்தி நாம் மிளகு பால் ,மிளகு ஆம்லெட் ,மிளகு அசைவ வறுவல் ,மிளகு சைவ வறுவல், என பலவகையான உணவுகளை செய்து சாப்பிட்டிருப்போம். ஏனென்றால் மிளகு நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. நாம் பொதுவாக குழந்தைகள் உடைய லஞ்ச் பாக்ஸ் இருக்கு புளி சாதம் லெமன் சாதம் தேங்காய் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் சாதம் என கலவை சாதங்களாக தான் பெரும்பாலும் கொடுத்து விடுவோம்.

-விளம்பரம்-

ஆனால் இதுவரையில் மிளகு சாதம் நாம் கொடுத்துவிட்டு இருக்க மாட்டோம். மிளகை பால் மற்றும் வேறு ஏதாவது உணவுகளில் போட்டால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள் ஆனால் அந்த மிளகாய் பயன்படுத்தி ஒரு அருமையான சாதம் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த மிளகு சாதம் செய்து கூடவே உருளைக்கிழங்கு வறுவல் வைத்து கொடுத்தால் போதும் நிச்சயமாக குழந்தைகள் வீடு திரும்புகையில் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் இருக்கும்.

- Advertisement -

ஏனென்றால் குழந்தைகள் அதை விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள். ஒருவேளை பெரியவர்களுக்கும் கூட மதிய நேரத்தில் என்ன செய்த சாப்பிடுவது என்று தெரியாமல் இருந்தால் இந்த மிளகு சாதத்தை மிகவும் சுலபமான முறையில் செய்து கொடுக்கலாம். அல்லது சாதம் வைத்தது மீதமாக இருந்தால் அந்த மீதமான சாதத்தில் இந்த மிளகு சாதத்தை செய்து உடன் ஒரு அப்பளம் பொருத்து வைத்தால் போதும் நொடியில் அனைத்து சாதமும் காலியாகி விடும்.

இந்த மிளகு சாதம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் மழைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் ஏற்ற ஒரு உணவாக இந்த மிளகு சாதம் இருக்கும். இருமல் சளி காய்ச்சல் உள்ளவர்களுக்கு கஞ்சி கொடுத்து போர் அடித்து இருந்தால் இந்த மிளகு சாதத்தை செய்து கொடுங்கள் அவர்களுக்கு உடல்நிலை மிகவும் சீக்கிரத்திலேயே சரியாகிவிடும். இவ்வளவு ஆரோக்கியமான இந்த மிளகு சாதம் சட்டென்று செய்யக் கூடியது. இப்ப வாங்க இந்த மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
3 from 2 votes

மிளகு சாதம் | Pepper Rice Recipe In Tamil

குழந்தைகள் அதை விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள்.ஒருவேளை பெரியவர்களுக்கும் கூட மதிய நேரத்தில் என்ன செய்த சாப்பிடுவது என்று தெரியாமல்இருந்தால் இந்த மிளகு சாதத்தை மிகவும் சுலபமான முறையில் செய்து கொடுக்கலாம். அல்லதுசாதம் வைத்தது மீதமாக இருந்தால் அந்த மீதமான சாதத்தில் இந்த மிளகு சாதத்தை செய்து உடன்ஒரு அப்பளம் பொருத்து வைத்தால் போதும் நொடியில் அனைத்து சாதமும் காலியாகி விடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: pepper rice
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வடித்த சாதம்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் சாதத்தை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும் குக்கரில் வைக்கக் கூடாது. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு கடலைப்பருப்பு சேர்த்து அது பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பு பொன்னிறம் ஆனதும் மிளகுத்தூள் சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக பச்சை வாசனை போகும் வரைகிளற வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொண்டு சாதத்தை அந்த கலவையில் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
     
  • இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி இலைகள் போட்டு இறக்கினால் சுவையான மிளகு சாதம் தயார்.
  • இதனுடன் எந்த வகையான வறுவல் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம் குறிப்பாக உருளைக்கிழங்கு வறுவல்வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g